திங்கட்கிழமை இதை செய்தால் அந்த வாரம் முழுவதும் உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் வராது. சீரான பண வரவை கொடுக்கும் சிம்பிளான பரிகாரம்.

*திங்கட்கிழமை இதை செய்தால் அந்த வாரம் முழுவதும் உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் வராது. சீரான பண வரவை கொடுக்கும் சிம்பிளான பரிகாரம்.*

திங்கட்கிழமை நம்முடைய வேலைகளை தொடங்கக் கூடிய முதல் நாள். ஞாயிற்றுக் கிழமை ஓய்வு எடுத்துவிட்டு, இந்த திங்கட்கிழமையை துவங்கும் போது சில பேருக்கு சோம்பேறித்தனம் இருக்கும். இந்த வாரத்தை எப்படி கலந்து செல்ல போகின்றோமோ என்ற பயம் சில பேருக்கு இருக்கும். ஏனென்றால் அவரவர் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், தடைகள், வேலை பளு, இவைகளை எல்லாம் நினைத்து பயந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இனி எந்த பயமும் கஷ்டமும் தேவையில்லை.

திங்கட்கிழமை நாளை சந்தோஷமாக தொடங்கலாம். இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு திங்கட்கிழமை நாளை தொடங்கினால் உங்களுடைய எந்த முயற்சியிலும் தடை இருக்காது. எந்த வேலை பளுவும் அதிக சுமையை கொடுக்காது. சுலபமாக எல்லா கஷ்டங்களையும் தகர்த்துவிட்டு, வாழ்க்கையை சுலபமாக நடத்தி செல்வீர்கள். அது மட்டும் இல்லாமல் இன்றைய சூழ்நிலையில் எல்லாருக்கும் இருக்கக்கூடிய நிதி பற்றாக்குறையை கூட தவிர்க்கக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

*தடைகளை தகர்க்கும் திங்கட்கிழமை செய்ய வேண்டிய பிள்ளையார் வழிபாடு:*

தடைகளை தகர்க்க வேண்டும் என்றால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு பிள்ளையார் வழிபாடு தான். நம்மில் எல்லோருக்கும் இது தெரியும். இந்த விநாயகரை திங்கட்கிழமை அன்று வழிபாடு செய்து விட்டால் போதும் அந்த வாரம் முழுவதும் நமக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். இந்த வாரம் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகின்றது. சிறப்பான இந்த நாளில் இப்படி ஒரு நல்ல விஷயம் நம் கண்களில் பட்டதற்கு அந்த இறைவனுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

திங்கட்கிழமை வேலையை தொடங்குவதற்கு முன்பு கொஞ்சம் அருகம்புல், ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். பிள்ளையார் கோவிலுக்கு போக வேண்டும். வீட்டின் அருகில் எல்லா இடத்திலும் பிள்ளையார் கோவில் இருக்கும். அருகம்புல்லை பிள்ளையாருக்கு கொடுத்து அர்ச்சனை செய்து மனதார உங்கள் பிரச்சனைகளை சொல்ல வேண்டும். இந்த வாரம் நான் எடுக்கும் முயற்சியில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

கையில் ஒரு தேங்காய் இருக்கிறது. அதை கையிலேயே வைத்து பிள்ளையாரை மூன்று முறை வலம் வந்து, தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு அந்த தேங்காயை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி பிள்ளையார் கோவிலில் சிதறு தேங்காயை உடைத்து விட்டு, பிறகு திங்கட்கிழமை நாளை தொடங்கி பாருங்கள். அந்த வாரம் முழுவதும் நீங்கள் ஓஹோ என ராஜா போல வாழலாம். எந்த பிரச்சனையும் வராது. பிரச்சனைகள் வந்தாலும் பயப்படத் தேவையில்லை. அதை எல்லாம் சரி செய்ய கூடிய மன தைரியத்தை அந்த பிள்ளையார் நமக்கு கொடுத்து விடுவார்,

ஒவ்வொரு வார திங்கட்கிழமை தொடக்கத்திலும் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். முடிந்தால் இரண்டு மண் அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு அந்த பிள்ளையாருக்கு விளக்கு ஏற்றி வைப்பது இன்னும் இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும்.