சும்மாவே இருந்த இவங்க தான் ஃபர்ஸ்ட் எலிமினேஷன்... பிக் பாஸ் சீசன் 7...

சும்மாவே இருந்த இவங்க தான் ஃபர்ஸ்ட் எலிமினேஷன்... பிக் பாஸ் சீசன் 7...

பிக்பாஸ் (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கினார். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இதில் கூல் சுரேஷ் (Cool Suresh), பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்‌ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு,  விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 முதல் நாமினேஷன்:

இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷனில், ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.

பிக் பாஸ் வீட்டில் முதல் வாரமே சண்டை கலவரம்:

பிக் பாஸ் போட்டி தொடங்கிய முதல் வாரமே சண்டையும் கலாட்டாவும் நிறைந்ததாக சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வெளியேற்றும் படலம் நடக்கும்.

பிக் பாஸ் சீசன் 7 முதல் எவிக்ஷன் அப்டேட்:

இந்நிலையில் முதல் எவிக்ஷனில், யுகேந்திரன் (Yugendran Vasudevan), பிரதீப் (Pradeep Antony) இருவரும் டேஞ்சர் ஜோனில் இருந்தனர். ஆனால், தற்போது நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவருக்கும் வாக்குகள் அதிகரித்துள்ளதால், அனன்யா ராவ் (Ananya Rao) குறைந்த வாக்குகள் பெற்று, பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் எவிக்‌ஷனுக்கான வார இறுதி ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் நடந்துள்ளது. இதில் அனன்யா ராவ் இந்த  நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய எபிசோடு ஷூட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனன்யா ராவ் எலிமினேட் ஆன எபிசோடு நாளை அதாவது 8 ஆம் தேதி அக்டோபர், 2023 இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் வெற்றியாளருக்கு கிடைக்க போகும் பரிசு என்ன?

பிக்பாஸ் போட்டியில் 7 வது சீசன் போட்டியில் 100 நாட்கள் தாக்குப்பிடிக்கும் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதையடுத்து, இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் பரிசாக வழங்கப்படும்.