நூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா?

நூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா?

🌹அதிக மாதம் என்பது சுமார் இரண்டரை (33 மாதங்களுக்கு ஒரு முறை) வருடத்திற்கு ஒரு முறை வரும். அதிக மாதம் என்பது எந்த மாதத்தில் வேண்டுமானாலும் வரும். ஒரு முறை
சிரவணத்தில் வரும் ஒரு முறை விசாகத்தில் வரும். இந்த மாதத்தில் தான் அதிக மாதம் என்று குறிப்பிட்டு வராது.

🌹அதிக மாதத்தில் எது ஒரு முறை தானம் செய்தாலும் 100 முறை தானம் செய்த பலன் கிடைக்கும். அதிக மாதத்தில் செய்ய வேண்டிய தான வகைகளின் விவரம் வருமாறு:-

🌹அதிக மாதத்தில் இப்படி தானங்கள் கொடுப்பது நல்லது. அதிக மாதத்தை முடிந்த மட்டில் மிகவும் நல்ல விதமாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். துளசி பூஜை திரவயங்களுடன்+ துளசி பூஜை பாத்திர சாமான்கள் நிறைவான தானம் போல் கொடுக்கலாம் அல்லது துளசி பூஜை திரவியங்களை மட்டும் கொடுக்கலாம்.

🌹சாலிக்ராம பூஜை சாமான்களுடன்+ சாலிக்ராம பூஜை பாத்திர சாமான்களும் வைத்து நிறைவான தானமாகக் கொடுக்கலாம் அல்லது சாலிக்ராம பூஜை த்ரவ்யங்கள் மட்டும் கொடுக்கலாம். பஞ்சாமிர்த சாமான்கள் களிம்பு ஏறாத வெண்கல கிண்ணங்களில் அல்லது தொன்னையில் கொடுக்கலாம்.

🌹அதிக மாதத்தில் ரவை உருண்டையும், அவலுருண்டையும் தானமாகக் கொடுக்கும் பொழுது 33 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். வஸ்தர தானம் என்பது புடவை+ரவிக்கை+ ஜதை வேஸ்டி என்றும் கொடுக்கலாம்.

🌹தேன்+நெய் தானம் களிம்பு ஏறாத கிண்ணத்திலும் கொடுக்கலாம் அல்லது தொன்னையில் கொடுக்கலாம். ஜமுக்காளம்+தலையணை+போர்வை கொடுக்கலாம். வசதி உள்ளவர்கள் மெத்தையும் சேர்த்து கொடுக்கலாம்.

🌹காய்கறிகள் தானத்தில் கசப்பு, துவர்ப்பு, காரம் போன்றவைகளை ஒதுக்கிவிட்டு மற்ற காய்கறிகள் கொடுக்கலாம். போஜன சாமான்கள் இருவர் சாப்பிடக்கூடிய அளவுக்கு எல்லாமே வைத்து கொடுக்கலாம். போஜனம் என்பது சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதினால் சமைப்பதற்கு உண்டான எல்லா சாமான்களும் கொடுக்கலாம்.

🌹யதா சக்தியான கோ தானம் என்பது பசு மாடு வைத்து இருப்பவர்கள் வீட்டில் நம்மால் முடிந்த தொகையை கொடுத்து பசுமாட்டை விலைக்கு வாங்கியதாக பாவித்து மறுபடியும் அதை அவர்களுக்கே தானமாகக் கொடுப்பதுடன் பசுமாட்டிற்கு வஸ்த்ரம், கால் சலங்கை, கொம்புகளுக்கு சலங்கை, பால் கறக்கும் பாத்திரம்,பசு மாடு குடிக்க வைக்கும் பாத்திரம்  எல்லாம் கொடுக்க வேண்டும்.

🌹கோக்ரஸம் என்பது அரிசி+வெல்லம்+பருத்திக் கொட்டை, பழம் எல்லாம் ஒரு தட்டில் அல்லது இலையில் வைத்து பசுமாட்டிற்கு கொடுப்பதாகும். ஆகையால் பசு மாடு வைத்திருக்கும் மாத்வர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கியதாக பாவித்து தானம் கொடுக்க வேண்டும். புஸ்தக தானம் என்பது விஷ்ணு சம்பந்தப்பட்ட புராண புத்தகங்கள் அதிலும் ஸ்ரீமத் பாகவதம் மிகவும் நல்லது.

🌹ஆசன தானம் என்பது உட்காரும் பலகை, நாற்காலியும் கொடுக்கலாம். பாய் தானம்  ஒற்றை யாக கொடுப்பது கூடாது. ஜோடியாக கொடுக்க வேண்டும்.

🌹நாணய தானம் என்பது நாணயங்களை வைத்து தானம் கொடுப்பது. நாணயம் கொடுத்திருப்பதினால் தட்சணை வைக்காமல் இருக்கக்கூடாது. தட்சணை வைத்து தான் தானம் கொடுக்க வேண்டும்.

🌹க்ருஹ தானம், பூ தானம் என்பது நம் பெண்களுக்கு வீடு, நிலம் போன்று கொடுப்பதாக இருந்தால் தானமாக கொடுக்கலாம். இலந்த பழம், நெல்லிக்காய் தானம் என்பது கார்த்திகையில் அதிக மாதமாக அமையும் பொழுது கொடுக்கலாம். மற்ற மாதங்களில் கிடைத்தாலும் கொடுக்கலாம்.

🌹விக்ரஹ தானம் என்பது சாதாரண சமயங்களில் கிருஷ்ணன் மற்றும் வேறு ஏதாவது பெருமாள் சிலை தானம் கொடுக்கலாம்.

🌹ஆனால் அதிக மாதத்தில் அதிக மாத தெய்வமான ராதா சமேத ஸ்ரீகிருஷ்ண சிலை தானம் கொடுப்பது மிகவும் நல்லது. பஞ்சகர்ஜுர தானம் என்பது உலர்ந்த பழவகைகளான, பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், திராட்சை, சர்க்கரை பாதாம், அத்திப்பழம், அக்ரோட் போன்றவைகளை வகைக்கு 33 வைத்து எல்லாம் சேர்த்து தானமாக கொடுப்பதாகும்.

🌹சாதுர் மாதம் அதிக மாதமாக அமைந்தால் முதலிலும், கடைசியிலும் வரும் இரண்டு மாதங்களில் பஞ்சகர்ஜீர தானம் கொடுப்பது கூடாது. வியாச பீட தானம் என்பது வியாச பீடத்தில் விஷ்ணு சம்பந்தமான புராண புத்தகம் அல்லது ஸ்தோத்திர புத்தகம் வைத்து தானமாகக் கொடுப்பது.

🌹விதை தானம் என்பது நல்ல பக்குவமான விதையாக உள் நெல் அல்லது அவல்  தானமாக கொடுப்பது. இது வம்ச விருத்தியை தரும். வாத்ய தானம் என்பது நம் பெண் குழந்தைக்கு வாத்ய வகை ஏதாவது கற்று கொடுத்திருந்தால் திருமணம் ஆன பிறகு அந்த வாத்யத்தை நம் பெண்ணிற்கே தானமாக கொடுக்கலாம். வெளி நபர்களுக்கும் கொடுக்கலாம். மேற்கூறிய தானங்கள் எல்லாவற்றிற்கும் தேங்காய் வைத்துக் கொடுப்பது மிகவும் நல்லது