இன்றைய ராசிபலன் - 23.09.2023 - சனிக்கிழமை

🔯ராசி பலன்கள்🔯🚩*
        ♻♻♻♻♻♻♻♻
           🕉 ராசி பலன்கள்

 🔔23-09-2023🔔

மேஷம்

செப்டம்பர் 23, 2023

குடும புரிந்து கொள்வீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.

பரணி : ஆசைகள் பிறக்கும்.

கிருத்திகை : மதிப்பு மேம்படும்.
---------------------------------------

ரிஷபம்

செப்டம்பர் 23, 2023

சிந்தனைகளில் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.

ரோகிணி :  ஏற்ற, இறக்கமான நாள்.

மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------

மிதுனம்

செப்டம்பர் 23, 2023

வெளியூர் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.

புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------

கடகம்

செப்டம்பர் 23, 2023

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உறவுகளின் வழியில் ஆதரவான சூழல் அமையும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளால் அனுகூலம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.

பூசம் : பிரச்சனைகள் குறையும்.

ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.
---------------------------------------

சிம்மம்

செப்டம்பர் 23, 2023

வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேல்நிலை கல்வி தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வருத்தம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 மகம் : பொறுமை வேண்டும்.

பூரம் : ஆதரவான நாள்.

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------

கன்னி

செப்டம்பர் 23, 2023

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தந்தை வழி உறவுகளால் அலைச்சல்கள் ஏற்படும். வருவாய் சார்ந்த முயற்சிகள் கைகூடும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் பிறக்கும். அமைதி பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

அஸ்தம் : மேன்மை ஏற்படும்.

சித்திரை : அனுபவம் பிறக்கும்.
---------------------------------------

துலாம்

செப்டம்பர் 23, 2023

குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை :  சந்தோஷமான நாள்.

சுவாதி : புரிதல் உண்டாகும்.
 
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------

விருச்சிகம்

செப்டம்பர் 23, 2023

பேச்சுக்களில் கனிவு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளைத் தவிர்க்கவும். வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : கனிவு வேண்டும்.

அனுஷம் : அறிமுகம் ஏற்படும்.

கேட்டை : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------

தனுசு

செப்டம்பர் 23, 2023

அலுவலக பணிகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சிந்தனைகளில் ஒருவித தடுமாற்றம் தோன்றி மறையும். கால்நடை பணிகளில் நிதானம் வேண்டும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 மூலம் :  கவனம் வேண்டும்.

பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திராடம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------

மகரம்

செப்டம்பர் 23, 2023

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் இருக்கவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : குழப்பம் உண்டாகும்.

திருவோணம் : விவேகத்துடன் இருக்கவும்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------

கும்பம்

செப்டம்பர் 23, 2023

உறவுகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். மனதில் புதிய தேடல் பிறக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உற்பத்தி பணிகளில் லாபம் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

சதயம் : தேடல் பிறக்கும்.

பூரட்டாதி : லாபம் மேம்படும்.
---------------------------------------

மீனம்

செப்டம்பர் 23, 2023

வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் ஆர்வம் உண்டாகும். பணி நிமிர்த்தமாக புதிய பொறுப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.

---------------------------------------

🕉 ஸ்ரீ குரு ஜோதிட ஐயர் 🕉