இன்றைய ராசிபலன் - 10.10.2023 - செவ்வாய்க்கிழமை

🔯ராசி பலன்கள்🔯🚩*
        ♻♻♻♻♻♻♻♻
           🕉 ராசி பலன்கள்


 🔔10-10-2023🔔

மேஷம்

அக்டோபர் 10, 2023

வரவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் மேஷ ராசி அன்பர்களே.. குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். புதிய கனவுகள் நனவாகும் வாய்ப்புகள் ஏற்படும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் புதுமையான வாய்ப்புகளையும், பொன் நிறம் ஆதரவுகளையும் தரும்.

அஸ்வினி : ஆடம்பர செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்படுவீர்கள்.

பரணி : நட்பு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கிருத்திகை : புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------

ரிஷபம்

அக்டோபர் 10, 2023

ஆதாயம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே.. திட்டமிட்ட சில காரியங்கள் நடைபெறும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகள் பூர்த்தியாகும். இன்று உங்களுக்கு வடக்கு திசை மாற்றத்தையும், 6ம் எண் பயணத்தையும், வெள்ளை நிறம் எண்ணங்களையும் ஈடேற்றித் தரும்.

கிருத்திகை : உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரோகிணி : பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும்.

மிருகசீரிஷம் : வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம்  லாபம் அடைவீர்கள்.
---------------------------------------

மிதுனம்

அக்டோபர் 10, 2023

வெற்றி நிறைந்த நாளாக அமையவிருக்கும் மிதுன ராசி அன்பர்களே.. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் உங்கள் உதவிகளைத் தேடி வருவார்கள்.  பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு கிழக்கு திசை மகிழ்ச்சியையும், 3ம் எண் புதிய வாய்ப்புகளையும், மஞ்சள் நிறம் சுபமுயற்சிகளையும் நிறைவேற்றித் தரும்.

மிருகசீரிஷம் : சகோதரர்களின் வழியில்  நன்மை உண்டாகும்.

திருவாதிரை : புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

புனர்பூசம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
---------------------------------------

கடகம்

அக்டோபர் 10, 2023

அமைதி நிறைந்த நாளாக அமையவிருக்கும் கடக ராசி அன்பர்களே.. மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். இன்று உங்களுக்கு தெற்கு திசை ஆதரவுகளையும், 8ம் எண் அறிமுகத்தையும், நீல நிறம் புரிதலையும் ஏற்படுத்தும்.

புனர்பூசம் : கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

பூசம் : வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.

ஆயில்யம் : புதிய நபர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும்.
---------------------------------------

சிம்மம்

அக்டோபர் 10, 2023

தடைகள் அகலும் நாளாக அமையவிருக்கும் சிம்ம ராசி அன்பர்களே.. சந்தேக உணர்வுகளைக் குறைத்துக் கொள்ளவும். வியாபார ரகசியங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். இன்று உங்களுக்கு மேற்கு திசை வெற்றியையும், 7ம் எண் முயற்சிகளையும், வெளிர் மஞ்சள் நிறம் ஒற்றுமையையும் அளிக்கும்.

மகம் : வரவு, செலவு பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.

பூரம் : குடும்பத்தாரின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள்.

உத்திரம் : உடனிருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதைத் தவிர்க்கவும்.
---------------------------------------

கன்னி

அக்டோபர் 10, 2023

பெருமை நிறைந்த நாளாக அமையவிருக்கும் கன்னி ராசி அன்பர்களே.. விமர்சன கருத்துக்களைக் குறைத்துக் கொள்ளவும். வியாபார பாக்கிகளை பொறுமையுடன் வசூலிக்கவும். மனம் தளராமல் எதிலும் செயல்படவும். இன்று உங்களுக்கு தெற்கு திசை புதுமையையும், 5ம் எண் தொழில் மாற்றத்தையும், வெளிர் சிவப்பு நிறம் பயணத்தையும் கொடுக்கும்.

உத்திரம் : குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.

அஸ்தம் : உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும்.

சித்திரை : பழைய பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
---------------------------------------

துலாம்

அக்டோபர் 10, 2023

தெளிவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் துலாம் ராசி அன்பர்களே.. பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டும், மதிப்பும் கிடைக்கும். நினைத்த பணிகள் கைகூடி வரும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை புதுமையையும், 4ம் எண் நெருக்கத்தையும், இளநீல நிறம் உற்சாகத்தையும் கொடுக்கும்.

சித்திரை : குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

சுவாதி : மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

விசாகம் : வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------

விருச்சிகம்

அக்டோபர் 10, 2023

பாராட்டு நிறைந்த நாளாக அமையவிருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே.. உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப்பு உண்டாகும். அரசுப் பணிகளில் சில சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை அறிந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு வடக்கு திசை காரிய அனுகூலத்தையும், 6ம் எண் ஆதரவுகளையும், வெள்ளை நிறம் பயணத்தையும் கொடுக்கும்.

விசாகம் : செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.

அனுசம் : வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் இருக்கவும்.

கேட்டை : வெளிவட்டாரங்களில் கௌரவம் மேம்படும்.
---------------------------------------

தனுசு

அக்டோபர் 10, 2023

இன்பம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் தனுசு ராசி அன்பர்களே.. குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 3ம் எண் புதிய ஆசைகளையும், ஆரஞ்சு நிறம் கலகலப்பான சூழலையும் கொடுக்கும்.

மூலம் : வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

பூராடம் : எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------

மகரம்

அக்டோபர் 10, 2023

விவேகம் வேண்டிய நாளாக அமையவிருக்கும் மகர ராசி அன்பர்களே.. வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு தெற்கு திசை நிதானத்தையும், 8ம் எண் தொழில் சிந்தனைகளையும், மஞ்சள் நிறம் புதிய சக்தியையும் கொடுக்கும்.

உத்திராடம் : உதாசினமான பேச்சுக்களால் வருத்தங்கள் உண்டாகும்.

திருவோணம் : ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் அமையும்.

அவிட்டம் : திட்டமிட்ட சில பணிகளில் மாற்றமான சூழல் அமையும்.
---------------------------------------

கும்பம்

அக்டோபர் 10, 2023

உற்சாகம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் கும்ப ராசி அன்பர்களே.. குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.  உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம்  மதிப்பு மேம்படும். இன்று உங்களுக்கு மேற்கு திசை செல்வ வளத்தையும், 4ம் எண் கொள்கைப் பிடிப்பு குணத்தையும், கருஞ்சிவப்பு நிறம் புதிய தூண்டுதலையும் கொடுக்கும்.

அவிட்டம் : வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு பெருகும்.

சதயம் : வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள்.

பூரட்டாதி : மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும்.
---------------------------------------

மீனம்

அக்டோபர் 10, 2023

சிக்கல் விலகும் நாளாக அமையவிருக்கும் மீன ராசி அன்பர்களே.. உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு வடக்கு திசை புரிதலையும், 5ம் எண் சமயோசித செயல்பாடுகளையும், பழுப்பு நிறம் நிலைத்தன்மையையும் கொடுக்கும்.

பூரட்டாதி : வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

உத்திரட்டாதி : உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.

ரேவதி : திடீர் யோகங்களின் மூலம்  நன்மை ஏற்படும்.
---------------------------------------

🕉 ஸ்ரீ குரு ஜோதிட ஐயர் 🕉