கை நிறைய வருமானம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்...

*கை நிறைய வருமானம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்:*

தொடர்ந்து வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பின் சொல்லக்கூடிய பரிகாரங்களை மாற்றி மாற்றி செய்து கொள்ளுங்கள்.

சனிக்கிழமைகளில் கருணைக்கிழங்கு சமைத்து சாப்பிட வேண்டும். சனிக்கிழமையில் எள்ளு சேர்த்து சாப்பிடலாம். எள்ளு மிளகாய் பொடி, எள்ளு பர்ஃபியை அடிக்கடி சாப்பிடலாம். நாள் கிழமை பார்க்காமல் எள்ளு சேர்த்த உணவினை சாப்பிட்டு வரும்போது சனிபகவானால் நமக்கு தினசரி வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்காது. இது ஆரோக்கியத்திற்கும் நல்லது தரக்கூடியது தான். தினமும் ஒரு கருப்பு நிற பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

சனிக்கிழமைகளில் பீட்ரூட் சமைத்து சாப்பிடலாம். இந்த பழக்க வழக்கங்களை எல்லாம் கொண்டு வந்தால் உங்களுக்கு சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகி சனியின் தாக்கம் குறைந்து வருமானத்தில் இருக்கும் தடைகள் விலகும். அது மட்டுமில்லாமல் வாரம் தோறும் வரக் கூடிய சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதும் சனி தோஷம் விலக உதவியாக இருக்கும்.

இதோடு சேர்த்து சனிக்கிழமைகளில் கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொள்வதும் சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெற்று தரும். இதோடு சேர்த்து தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்து வாருங்கள். குலதெய்வத்தின் அனுகிரகமும் சனி பகவானின் ஆசிர்வாதமும் சேர்ந்து உங்கள் வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடக்க தொடங்கிவிடும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது, சனி பகவானின் அருளை நமக்கு பெற்று தரும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஊனமற்றவர்கள் இருக்கக்கூடிய ஆசிரமங்கள் எவ்வளவோ நம்முடைய நாட்டில் இருக்கிறது. அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சரிதான் உங்களுக்கே வருமானம் இல்லை. தொழில் சிறந்து நடக்கவில்லை, கையில் வேலையும் இல்லை. எப்படி வருமானம் இல்லாமல் உதவி செய்வது.

பணத்தை வைத்து தான் உதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பணம் அல்லாமல் இப்படிப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவி நிறைய இருக்கிறது. அப்படி உடல் அளவில் உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால் அந்த ஆசிரமத்திற்கு சென்று ஒரு நாள் சேவை செய்துவிட்டு வரலாம்.