இன்றைய ராசிபலன் - 04.01.2024 - வியாழக்கிழமை

  🔯ராசி பலன்கள்🔯🚩

🔔04-01-2024🔔


மேஷம்

ஜனவரி  4, 2024

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வழக்குகளில் சில நுணுக்கங்களை புரிந்துகொள்வீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயமும், அலைச்சலும் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக முயற்சிகள் கைகூடும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரணி : நுணுக்கங்களைஅறிவீர்கள்.
கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------

ரிஷபம்

ஜனவரி  4, 2024

மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும்.  குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். ஆக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------

மிதுனம்

ஜனவரி  4, 2024

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------

கடகம்

ஜனவரி  4, 2024

வியாபாரப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
புனர்பூசம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
பூசம் : செலவுகள் ஏற்படும்.
ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------

சிம்மம்

ஜனவரி  4, 2024

அரசு சார்ந்த உதவி கிடைக்கும்.  உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எழுத்து துறைகளில் புதிய மாற்றம்  ஏற்படும். அனுபவம் மிக்கவர்களின் அறிமுகம் உண்டாகும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகம் : உதவி  கிடைக்கும்.
பூரம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திரம் : ஆதரவான நாள்.
---------------------------------------

கன்னி

ஜனவரி  4, 2024

மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய பயணங்கள் கைகூடும். இணைய வர்த்தக தொழிலில்  முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனை உண்டாகும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தயக்க உணர்வு இல்லாமல் செயல்படுவது நல்லது. சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை :  தெற்கு
அதிர்ஷ்ட எண் :  2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------

துலாம்

ஜனவரி  4, 2024

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். இன்னல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சித்திரை : அறிவு வெளிப்படும்.
சுவாதி :  கவனம் வேண்டும்.
விசாகம் : அலைச்சல் அதிகரிக்கும்.
---------------------------------------

விருச்சிகம்

ஜனவரி  4, 2024

உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :  1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : அபிவிருத்தியான நாள்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------

தனுசு

ஜனவரி  4, 2024

தந்தை வழி உறவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடை பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை சார்ந்த நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். கற்பித்தல் திறனில் மாற்றம் உண்டாகும். கூட்டாளிகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய நினைவுகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : சேமிப்பு குறையும்.
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------

மகரம்
ஜனவரி  4, 2024

நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்காண வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
---------------------------------------

கும்பம்

ஜனவரி  4, 2024

உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். பொறுப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
சதயம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரட்டாதி : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------

மீனம்

ஜனவரி  4, 2024

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எந்த செயலிலும் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் :  அடர் சிவப்பு
பூரட்டாதி : சந்தோஷமான நாள்.
உத்திரட்டாதி : நெருக்கம் மேம்படும்.
ரேவதி : இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------