மாதம் ரூ.9,250 வருமானம் வருமானம் கொடுக்கும் அசத்தல் திட்டம்... Post Office...

பல வகையான திட்டங்கள் தபால் அலுவலகத்தால் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme - MIS). இது ஒரு டெபாசிட் திட்டமாகும், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற்று பயனடையலாம். POMIS முதலீட்டு திட்டத்தில், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்யலாம். நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தாலும், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்கப்படும். தற்போது, தபால் அலுவலக எம்ஐஎஸ்-ல் வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் ஒரே கணக்கில் ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 மாத வருமானம் பெறலாம்.  அதேசமயம், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானம் ஈட்டலாம்.

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், ஒரே நேரத்தில் 5 வருடங்கள் டெபாசிட் செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும். முதிர்ச்சியடைந்த பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும். ஆனால் ஐந்தாண்டுகளுக்கு முன் பணம் தேவைப்பட்டு, அதை திரும்பப் பெற விரும்பினால், அல்லது 5 ஆண்டுகளுக்கு மேல் மாதாந்திர வருமான தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தைத் தொடர விரும்பினால், இதற்கான விதிகள் என்ன என்பதை இங்கே காணலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு, முதிர்வுக் காலம் முடிவதற்குள் அந்தத் தொகையைத் திரும்பப் பெற விரும்பினால், 1 வருடத்திற்கு உங்களுக்கு இதில் போட்ட பணத்தை எடுக்க முடியாது. ஒரு வருடத்திற்கு பின் தான் பணத்தை எடுக்க முடியும்

1 வருடத்திற்குப் பிறகு, கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான வசதியைப் பெறுவீர்கள், ஆனால் இதில், உங்கள் டெபாசிட் செய்யப்பட்ட தொகையிலிருந்து அபராதமாக சில பணம் கழிக்கப்படுவதால் நஷ்டம் ஏற்படும்.

ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.

அதேசமயம், கணக்கைத் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கு முன்பும் நீங்கள் பணத்தை எடுக்க விரும்பினால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 சதவீதத்தைக் கழித்த பிறகு வைப்புத் தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை நீட்டிப்புக்கான விதிகள்

பொதுவாக, FD, PPF போன்ற அனைத்து திட்டங்களிலும் உங்கள் கணக்கை நீட்டிக்கும் வசதியைப் பெறுவீர்கள், ஆனால் தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் இந்த வசதி உங்களுக்குக் கிடைக்காது. எனினும், திட்டத்தின் பலன்களை நீங்கள் மேலும் பெற விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகு புதிய கணக்கைத் திறக்கலாம்.

தபால் அலுவலகம் MIS: நீங்கள் சம்பாதிக்கக்கூடிய மாத வருமானம்

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் ஒரே கணக்கில் ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 மாத வருமானம் பெறலாம். அதேசமயம், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானம் ஈட்டலாம்.