படம் பார்த்த பிரபலம் சொன்ன ரிவ்யூ... கேப்டன் மில்லர் படம் எப்படியிருக்கு...

அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இப்படம் வரும் வெள்ளக்கிழமை அன்று (ஜனவரி 12) வெளியாக உள்ள நிலையில், இப்படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் அதற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ், நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை, ‘சானிக்காயிதம்’ படத்தை இயக்கி பிரபலமான அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இவர் படம் என்றாலே, அதில் வெட்டு-குத்து-கொலை இருக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அந்த வகையில், கேப்டன் மில்லர் படத்திலும் துப்பாக்கி சண்டை-போர்கள காட்சிகள் என ரசிகர்களை ஈர்க்கும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், அதிதி பாலன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. வழக்கமாக படம் வெளியாவதற்கு முன்னர் அப்படத்தின் காட்சிகள் அல்லது முழு படமே வேலைப்பார்த்த படக்குழுவினர் காண்பது வழக்கம். அந்த வகையில், கேப்டன் மில்லர் படத்தின் சில காட்சிகளை அதன் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் பார்த்துள்ளார். இதையடுத்து, தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவையுல் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் மில்லர் படத்திற்கான பின்னணி இசை மற்றும் மிக்ஸ் இசை பணியினை முடித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும், படம் நன்றாக உள்ளதற்கு அர்த்தமாக 5 ஃபயர் எமோஜிகளை குறிப்பிட்டுள்ள அவர், தனுஷின் இன்ட்ரோ காட்சியும் அதற்கான இசையும நன்றாக இருப்பதாக தனது பதிவில் கூறியிருக்கிறார். இவரது பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.