இன்றைய ராசிபலன் - 16.01.2024 - செவ்வாய்க்கிழமை

  🔯ராசி பலன்கள்🔯🚩

🔔16-01-2024🔔


மேஷம்
ஜனவரி 16, 2024

உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரம் சார்ந்த பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : அலைச்சலான நாள்.
கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------

ரிஷபம்

ஜனவரி 16, 2024

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வித்தியாசமான ஆடைகளின் மீது ஆர்வம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.
ரோகிணி :  தாமதம் விலகும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------

மிதுனம்

ஜனவரி 16, 2024

உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கோவில் நலப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடை அலங்காரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வேலையாட்களுடன் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------

கடகம்
ஜனவரி 16, 2024

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும்.  புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை :  கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் :  ஊதா நிறம்
புனர்பூசம் : அறிமுகம் உண்டாகும்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------

சிம்மம்
ஜனவரி 16, 2024

மனதிற்கு பிடித்தவர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.  ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகம் : நெருக்கடியான நாள்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் :  ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------

கன்னி
ஜனவரி 16, 2024

மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் கைகூடும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் :  வெளிர்நீலம்
உத்திரம் :  சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : பொறுப்புடன் செயல்படுவார்கள்.
---------------------------------------

துலாம்

ஜனவரி 16, 2024

சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வாகனம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் கைகூடும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------

விருச்சிகம்

ஜனவரி 16, 2024

தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் :  7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
அனுஷம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
கேட்டை : ஆர்வம் மேம்படும்.
---------------------------------------

தனுசு

ஜனவரி 16, 2024

தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான முடிவு ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணம் மேம்படும். நறுமண பொருட்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். விவசாயப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம காரியத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------

மகரம்

ஜனவரி 16, 2024

இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உங்கள் மீதான விமர்சனங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
உத்திராடம் : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
திருவோணம் :  முடிவுகளை எடுப்பீர்கள்.
அவிட்டம் : ஆதாயம் கிடைக்கும்.
---------------------------------------

கும்பம்

ஜனவரி 16, 2024

மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள்.  பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பயணத்தால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உங்கள் பேச்சுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். வித்தியாசமான பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு  
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
சதயம் : உதவிகள் சாதகமாகும்.
பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
---------------------------------------

மீனம்

ஜனவரி 16, 2024

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக எதிர்ப்புகளால் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி : சேமிப்பு குறையும்.
---------------------------------------