ஞான வளம் தரும் கேது பகவான்
ஞான வளம் தரும் கேது பகவான்
கேது:
ஞானகாரகன்.
கேது
நவக்கிரகங்களில் மாதா மககாரன் (தாய் வழி பாட்டன், பாட்டி) என்று காரகத்துவம் பெறும் கிரகம்.
‘ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை, கேதுவைப் போல் கெடுப்பாரும் இல்லை’ என்ற ஜாதகப் பழமொழி உண்டு.
ஞானத்தை கொடுக்கும் கேதுவிற்கு பன்னிரண்டாம் வீடாக அமையப்பெற்றால்
முக்தி அதாவது கடைசி ஜெனனம் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகு உடல் பகுதி என்றால்,
கேது தலைப்பகுதி ஆகும்.
அதனால்தான் தலைக்குப் பிரதானமான ஞானம், அறிவு, முக்தி சார்ந்த விஷயங்களுக்கு பிரதான கிரகமாக கேது கருதப்படுகிறது.
கோயில்களில் உள்ள நவக்கிரக சிலைகளில் வடக்கு பார்த்த குருவுக்கும், மேற்கு பார்த்த சனீஸ்வரருக்கும் இடையில் வடமேற்கு மூலையில் இருப்பவர்
கேது பகவான்.
கேதுவிற்குரிய தெய்வம்
விநாயகரை வழிபடுவது
சிரமப் பரிகாரமாகும்.
கேதுவும் ராகுவைப் போன்றே எதிர் திசையில் வலமிருந்து இடமாக சுற்றி வரும் சாயா கிரகம். அதாவது நிழல் கிரகம்.
கேது - குருவுடன் இணைந்தாலும்,
குருவால் பார்க்கப்பட்டாலும்
ஸ்தான பலம் வலுத்து இருந்தால் கோடீஸ்வர யோகம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
கேதுவிற்குரிய வேறு பெயர்கள்:
கதிர்ப்பகை,
செம்பாம்பு,
சிகி.
அஸ்வினி,
மகம்,
மூலம். ஆகிய 3 நட்சத்திரங்களும் கேது ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்களாகும்.
குழந்தை பிறக்கும் பொழுது இந்த மூன்று நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தால், குழந்தையின் முதல் திசா கேது திசாவாக இருக்கும்.
பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு எந்த பாதம் என்பதை தெரிந்து இருப்பு திசாவை குறிப்பிடலாம்.
கேது திசா மொத்தம் 7 வருடங்கள்.
கேது கிரக அம்சங்கள் :
கிரக ஜாதி - சங்கிரம ஜாதி.
கிரக ரத்தினம் - வைடூரியம்.
கிரக வாகனம் - சிங்கம்.
கிரக வடிவம் - நெடியார் (உயரம்).
கிரக அதிதேவதை - இந்திரன், விநாயகர், சண்டிகேஸ்வர்.
கிரக குணம் - குரூரர் (பாவ கிரகம்).
கிரக தானியம் - கொள்ளு.
கிரக சுவை - புளிப்பு.
கிரகப் பிணி - சிலேத்துமம்.
கிரக வஸ்திரம் - பலவர்ணம் வஸ்திரம்.
கிரக தத்துவம் - அலிகிரகம்.
கிரக தூப தீபம் - செம்மரம்.
கிரக உலோகம் - துருக்கல்.
கிரக நிறம் - சிவப்பு.
கிரக க்ஷேத்திரம் - காளஹஸ்தி.
கிரக பாராயணம் - விநாயகர் அகவல், விநாயகர் கவசம்.
கிரக பார்வை - 3, 6, 7, 12 (வல-இடமாக).
கிரக ஆட்சி வீடு - மீனம்.
கிரக உச்ச வீடு - கும்பம்.
கிரக நீச்ச வீடு - சிம்மம்.
கிரகபஞ்சபூதம் - ஆகாயம்.
கிரக திக்கு - வடமேற்கு.
கிரகமூலத்திரிகோண வீடு - சிம்மம்.
கிரக நட்பு வீடு - மகரம், மீனம்.
கிரக பகை வீடு - கடகம், சிம்மம்.
கிரக புஷ்பம் - செவ்வல்லி.
கிரக உறுப்பு - கை, தோள்.
கிரக சமித்து - தர்ப்பை.
கிரகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை வருடங்கள்
(18 மாதங்கள்).
கேது கிரகத்தின் காரகத்துவம்:-
ஞானம், தாய்வழி பாட்டன்- பாட்டி, கபடத்தொழில், கம்பளம், கீழ்குல தொழில் விபசாரம், பாபத் தொழில், பரதேச ஜீவனம், காயம், விஷரோகம், அகங்காரம், குஷ்டம் வயிற்று வலி, தீயால் கண்டம், சிறைப்படல் போன்ற விஷயங்களுக்கு கேது கிரகம் காரகத்துவம் பெறுகிறது!
கேது கிரகத்தால் வரும் நோய்கள்
காது வலி, மூட்டு வலி, பெண் நோய், முதுகுத் தண்டு வலி ஆகியவையாகும்.
மோட்சகாரகர், இரக்க குணம் மிக்கவர், ஞானத்தை அளிப்பவர், இவர் திரிகோணத்தில் இருப்பது நன்மையளிக்கும்.
முற்பிறவியில் நாம் செய்த நன்மை, தீமைகளை நமக்கு புரிய வைப்பவர்.
கேது தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலனைத் தருபவர்.
அவர் பலமாக இருந்தால் சென்ற பிறவியில் நல்வினைகளை செய்தவர் என்பதை அறியலாம்!
கேது பலமற்று இருந்தால் ஆண் குழந்தைகளுக்கு தோஷம் தரும்.காலில், பாதத்தில் அடிக்கடி நோய் வரும்.
கிட்னி பாதிப்பு
இருந்தால் அதற்குரிய பரிகாரங்களை எளிய முறையில் செய்தாலும் பாதிப்பு வராது!
கேது 2-ம் பாவத்தில் இருந்தால்:-
* ஒழுக்கமுடையவராக இருப்பது அவசியம்.
* பெண்கள், சிறுவர்களுக்கு உதவி செய்வது உத்தமம்.
கேது 5-ம் பாவத்தில் இருந்தால்:-
* குருவிற்கு பிரார்த்தனை செய்வது நலம்.
* இரும்பு பெட்டிகள், பூட்டுகள் பூட்டாமல் இருக்க வேண்டும்.
கேது 8-ம் பாவத்தில் இருந்தால்:-
* கறுப்பு, வெள்ளை கலந்த போர்வைகளை ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
கேது 12-ம் பாவத்தில் இருந்தால்:-
* கறுப்பு, வெள்ளை கலந்த நாய் வளர்ப்பது நன்மை தரும்.
பொதுவாக, கேது தசாபுத்தி நடைபெறும் பொழுது செய்ய வேண்டிய பரிகாரங்கள் பின்வருமாறு:--
அதற்குரிய தோஷ பரிகாரங்கள்:-
* விநாயகர் சதுர்த்தியன்றும், ஒவ்வொரு மாதம் வரும் சதுர்த்தியன்றும் விநாயகரை வணங்கி ஏழைகளுக்கு இனிப்பை தானமாக வழங்க வேண்டும்.
* எலுமிச்சை, வாழைப்பழம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நன்மை தரும்.
* கறுப்பு, வெள்ளை கலந்த நாய் வளர்த்து அதற்கு உணவாக பால் கொடுப்பது நன்மை.
* ஒழுக்கமாக இருப்பது நன்மை தரும்.
* ஏழைக்கு, பெண் குழந்தைகளுக்கு
உணவு, உடை தானமாக கொடுப்பது உடல் நலம் தரும்.
பாவ கிரகங்கள் அதாவது ராகு, கேது 2, 8-ம் பாவங்களில் இருப்பது எந்த வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதை அந்த வீட்டின் ராசியின் தன்மையைக் கொண்டு அறியலாம்!
கேதுவிற்குரிய காயத்ரி மந்திரம்:-
ஓம்; அஸ்வத்வஜயா வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்!
இந்த மந்திரத்தை கோயிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் குருவுக்கும், சனீஸ்வரருக்கும் இடையில் இருக்கும் கேதுவிற்கு முன்பாக நின்று ஏழு முறை கேதுவிற்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கேதுவிற்குரிய மற்றொரு காயத்ரி மந்திரம் :-
"ஓம்; சித்ரவர்ணாய வித்மஹே
ஸர்பரூபாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்!"
காயத்ரி மந்திரம் சொல்வதால் கிடைக்கும் பலன்கள் :-
* வேத வேதாந்த அறிவு உண்டாகும்.
* பிரச்னைகள் தீரும்.
* விஞ்ஞான, மெய்ஞான அறிவு உண்டாகும்.
* வியாதிகள் அகலும்.
* பகையை வெல்லலாம்.
* பாவங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும்.
* நட்பு வளரும்.
தமிழில் கேதுவிற்குரிய மந்திரம்:
கேதுத்தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி... வாதம் வம்பு வழக்குகள் இன்றி கேதுத் தேவே
கேண்மையாய் ரட்சித் தருள்வாய்!
கேதுவிற்குரிய நியூமராலஜி எண், 7.
ஏழு எண்ணிற்கு பதிலாக கேதுவின் நட்பு கிரகமான புதனின் எண் 5ஐ பயன்படுத்தலாம்!
நவக்கிரகங்களில் ஒருவரான கேது,புகை நிற மேனியைக் கொண்டவர்.
இவருக்கு காலன், தூம கேது, லோக கேது, மாச கேது, சர்வ கேது, ரவுத்திரன் போன்ற பெயர்களும் உள்ளன.
வாயு திசைக்கு உரியவரான கேது, ஆணுமற்ற, பெண்ணுமற்ற அலிக்கிரகமாகும்.
அசுரர்களில் பெரியவர் கேது.
இவருக்கு ராசியில் தனி வீடு கிடையாது. எந்த இடத்தில் இருக்கிறாரோ, அதற்கான பலனைக் கிரகித்து அளிக்கும் வல்லமை கொண்டவர்.
ராகுவைப் போலவே, கேதுவுக்கும் சூரியனும், சந்திரனும் பகைக் கிரகங்கள்.
பஞ்ச பூதங்களில் இவர் நீர். இவரது உச்ச வீடு விருச்சிக ராசியாகும்.
நீச வீடு ரிஷபம்.
புதன், சுக்ரன், சனி போன்றவை நட்புக் கிரகங்கள்.
ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியில் வழிபடும் பொழுது, கேது கிரகத்திற்கு என உள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்புக்குரியதாகும்.
கேதுவுக்கான காயத்ரி மந்திரத்தை, தினந்தோறும் 108 முறை சொல்வது சாலச் சிறந்தது.
கேது காயத்ரி மந்திரம் :
‘ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்’
குதிரைக் கொடியை வைத்திருக்கும் கேதுவை அறிந்து கொள்வோம். சூலம் ஏந்திய கரத்தை கொண்ட அவன் மீது தியானம் செய்வோம். கேது பகவானாகிய அவன், நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுக்கு,
வேத, வேதாந்த அறிவு உண்டாகும். பிரச்சனைகள் விலகும். விஞ்ஞான, மெய்ஞான அறிவைப் பெறலாம். வியாதிகள் நீங்கும். பகையை வெல்வீர்கள். பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். நட்பு வளரும்
கேது காயத்ரி மந்திரம்
"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்"
திருச்சிற்றம்பலம்