இன்றைய ராசிபலன் - 31.03.2024 - ஞாயிற்றுக்கிழமை

 🔯ராசி பலன்கள்🔯🚩

🔔31-03-2024🔔

மேஷம்
மார்ச் 31, 2024

மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிலருடைய உதவிகளால் நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : பொறுப்பு மேம்படும்.
கிருத்திகை : மந்தமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 31, 2024

வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
ரோகிணி : மேன்மை ஏற்படும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 31, 2024

பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தடை விலகும் நாள்.  

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் :  நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கடகம்
மார்ச் 31, 2024

நண்பர்களின் வட்டம் விரிவடையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். துன்பம் விலகும் நாள்.  

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 31, 2024

பயணங்களின் மூலம் சில அனுபவம் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். சக ஊழியர்களால் மனஅமைதி ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வரவு நிறைந்த நாள்.  

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
மகம் :  அனுபவம் ஏற்படும்.
பூரம் : நெருக்கடியான நாள்.
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
---------------------------------------

கன்னி
மார்ச் 31, 2024

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். அதிரடியான திட்டங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  
அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.
சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------

துலாம்
மார்ச் 31, 2024

எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் பிடிவாத குணம் குறையும். இழுபறியாக இருந்துவந்த சில தனவரவுகள் கிடைக்கும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். சில அனுபவங்களால் மனதளவில்  புதிய பாதைகள் புலப்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை :  உற்சாகமான நாள்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் :  துரிதம் ஏற்படும்.
---------------------------------------

விருச்சிகம்
மார்ச் 31, 2024

விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய விஷயங்களால் மனதில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமிர்த்தமான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை :  மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
விசாகம் : மாற்றம் ஏற்படும்.
அனுஷம் : அலைச்சல் அதிகரிக்கும்.
கேட்டை : குழப்பம் ஏற்படும்.
---------------------------------------

தனுசு

மார்ச் 31, 2024

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் நிதானத்தை கையாளுவது நல்லது. சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை :  வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : சோர்வுகள் உண்டாகும்.
உத்திராடம் :  நிதானத்தை கையாளவும்.
---------------------------------------

மகரம்
மார்ச் 31, 2024

பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
திருவோணம் : தாமதங்கள் விலகும்.
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------

கும்பம்
மார்ச் 31, 2024

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் :  1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரட்டாதி : மதிப்பு மேம்படும்.
---------------------------------------

மீனம்

மார்ச் 31, 2024

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------