அரசியலில் குதிக்கும் பிரபல நடிகை !!
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஏஞ்சிலினா ஜோலி. இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார். உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி, அகதிகளுக்கான ஐநா ஆணையம் மூலம் அகதிகளுடன் பணியாற்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார். உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார்.
தனது குழந்தைகளுக்காக கணவர் நடிகர் பிராட் பிட்டை விவாகரத்துக்கு செய்துவிட்டு, சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 
ஏஞ்சலினா ஜோலி பேசுகையில், “எனது அரசியல் ஆர்வம் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், இதே கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் கேட்டிருந்தால் நிச்சயமாக சிரித்திருப்பேன். தற்போது அப்படியில்லை. சர்வதேச அளவில் அக்கறை தேவைப்படும் மக்களுக்காக உழைத்து வருகிறேன்.

ஐநா-வின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பின் தூதராகப் பல நாடுகளுக்குப் பயணித்து மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.