பிரபல ஹோட்டல்களில் வருமான வரி சோதனை!
சென்னையில் வருமான வரித்துறை சோதனையானது, சரவண பவன், ஹாட் பிரட்ஸ், அஞ்சப்பர் குழுமம் மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் குழுமம் உள்ளிட்ட பிரபல 5 ஹோட்டல்களின் அலுவலகங்கள் உட்பட 32 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், இந்த ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

கடந்த சில வருடங்களாக இந்த ஹோட்டல்கள் பெரும் அளவிவல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீவிர விசாரணைக்கு பின்பே மதிப்பீடு குறித்த விவரங்கள் தெரியவரும்.