விஸ்வாசம் - அஜித் விமர்சனம்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் குறித்து சிவா பேட்டி அளித்துள்ளார்.
விஸ்வாசம் படம் சிறப்பாக வந்துள்ளதாக அஜித் சார் திருப்தி அடைந்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு நாம் ஒன்றாக வேலை செய்த நான்கு படங்களில் இது தான் சிறந்தது என்றார் அஜித் சார். இதை அவர் அனைவர் முன்பும் சத்தமாக கூறினார். அதனால் தான் நான் தற்போது தெரிவிக்கிறேன். ஒரு பெரிய நடிகரான அஜித் சார் இப்படி கூறியது எனக்கு உற்சாகம் அளித்துள்ளது.
விஸ்வாசத்தில் அரசியல் எதுவும் இல்லை. இது குடும்பத்துடன் பார்க்கும் படம். பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை. இரண்டு படங்களும் ஒன்றாக வருகின்றன. இரண்டுமே பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். இங்கு மோதல், போட்டி எல்லாம் இல்லை. அஜித் சாரும் அப்படித் தான் நினைக்கிறார்.