இயற்கை அழகுமிக்க  வியட்நாம்
ஹாலோங் விரிகுடா

ஹாலோங் விரிகுடாவின் கர்ஸ்ட் கடற்கரை உலகின் மிகப் பிரபலமான கடற்கரை மற்றும் யுனெஸ்கோவால்  அங்கீகரிக்க பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான சுண்ணாம்பு தீவுகள் இந்த வளைகுடாவை சுற்றி அமைத்துள்ளது. இவை நீங்கள் படகில் செல்லும்போது ரம்யமாக காட்சியளிக்கும். இங்கு மேலும் பல குகை போன்ற அமைப்புகளை கொண்ட பாறைகளை காணலாம்.



சன் டூங் குகை

சன் டூங் குகை, வியட்நாம் நாட்டின் மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்த உலகின் மிகப் பெரிய சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை குகையாகும். இது 5 கிலோ மீட்டர் நீளமும், 200 மீட்டர் உயரமும், 150 மீட்டர் அகலமும் கொண்ட 150 தனித்தனி குகைகளின் தொடராகும். இக்குகைகள் போங் நா-கே பாங் தேசியப் பூங்காவின் இதயமாக உள்ளது.

லாவோஸ் – வியட்நாம் எல்லையில் வியட்நாமின் குவாங் பின்க் மாகாணத்தில் உள்ள ட்ராக் எனுமிடத்தில் அடர்ந்த மலைக்காட்டில் இக்குகை அமைந்துள்ளது. இக்குகையை 1991ம் ஆண்டில் பிரித்தானிய குகை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்கள்.

ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால், இந்தக் குகை உருவானதாகக் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே இக்குகையை மழை ஆறு என்று பொருள் கொண்ட சான் டூங் என்ற பெயர் வைத்துள்ளனர்.



தாக்லாக் மாகாணம்

தாக்லாக் என்பது வியட்நாமின் அறுபத்து மூன்று மாகாணங்களில் ஒன்று ஆகும். இதன் பெயர் தார்லாக் என சிலவேளைகளில் வழங்கப்பட்டாலும் அலுவல்முறைப்படி இது தாக்லாக் என்றே அழைக்கப்படுகிறது. இது வியட்நாமின் ஒன்பது வட்டாரங்களில் ஒன்றாகிய நடுவண் மேட்டுச் சமவெளி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு, வியட்நாமியரோடு வியட்நாமியர் அல்லாத பல சிறுபான்மை இனக்குழுவினர் வாழ்கின்றனர்.


மீ சன்

மீ சன், வியட்நாம் நாட்டில் உள்ள பண்டையக்கால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும். மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ கிராமத்திற்கு அருகில் உள்ளது. இரு மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இரு கிமீ அகலமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இக்கோயில்கள் உள்ளன. சம்பா அரசர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகவும், அரச பரம்பரையினர் மற்றும் பெரும் வீர்ர்களின் நினைவிடமாகவும் இருந்துவந்துள்ளது. சமச்கிருதம் மற்றும் சம் மொழி கல்வெட்டுகள், 70 இக்கும் மேற்பட்டக் கோயில்கள் ஒருகாலத்தில் இங்கு இருந்தன. ஆனால், வியட்நாம் போரின்போது இவற்றில் பெரும்பாலனவை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அழிந்துபோயின. 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.


ஹோ சி மின் நகரம்


ஹோ சி மின் நகரம்  என்பது வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும். 17ம் நூற்றாண்டில் வியட்நாமுடன் இணைக்கப்படும் வரை இந்நகரம் கெமர் மொழியில் "பிறே நொக்கோர்" என்ற பெயரில் கம்போடியாவின் முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது. இது பின்னர் சாய்கோன் என்ற பெயரில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடான கோச்சின்சீனாவின் தலைநகராக விளங்கியது. 1954 முதல் 1975 வரையில் தென் வியட்நாமின் தலைநகராக இருந்தது. மே 1, 1975 இல், சாய்கோன் அதன் அயல் மாகாணமான 'கியா டின்' உடன் இணைக்கப்பட்டு வியட்நாமியக் கம்யூனிசத் தலைவர் ஹோ சி மின் அவர்களின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும் நகரின் குடிமக்கள் பலரால் இன்னமும் இது "சாய்கோன்" என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது



ஹனோய்

ஹனோய் நகரம் அண்மைக்காலங்களில் கட்டட அதிகரிப்பைச் சந்தித்துள்ளது. புதிய மாநகரப் பகுதிகளில் உருவாகும் வானளாவிய கட்டடங்கள் ஹனோயின் காட்சியை பெருமளவில் மாற்றியுள்ளன. இசுகைசுகிராபர்சிற்றி இணையத்தளத்தின்படி, 2013ல், ஹனோயிலுள்ள இரு உயரமான கட்டடங்கள் ஹனோய் லான்ட்மாக் 72 டவர் (336மீ, வியட்நாமிலேயே உயரமானதும் மலேசியாவின் பெட்ரோனாசு இரட்டைக் கோபுரங்களுக்கு அடுத்ததாக தென்கிழக்காசியாவிலேயே உயரமானதுமாகும்) மற்றும் ஹனோய் லொட்டே மையம்(267மீ, வியட்நாமில் இரண்டாவது உயரமானது) என்பனவாகும்.