அசாம்

அசாம் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. அவற்றில் நடுவில் அமைந்திருக்கும் மாநிலம் ஆகும். இது செந்நிற ஆறுகளையும், நீல நிற மலைகளையும் கொண்டது. காசிரங்கா தேசியப் பூங்கா, மனாஸ் தேசியப் பூங்கா, போபிதோரா காட்டுயிர்ப் பகுதி, நாமெரி தேசியப் பூங்கா மற்றும் திப்ரு-ஷேய்க்ஹோவா தேசியப்பூங்கா ஆகியவை முக்கியமானவை ஆகும். இந்தியாவில் மிக அடத்தியான காடுகள் அசாமில் உள்ளன.

கவுகாத்தி - அசாமின் தலைநகர்

மாஜூலி -நன்நீர்த் தீவு

காசிரங்கா தேசியப் பூங்கா

காசிரங்கா வனவிலங்கு காப்பகம் இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கும் காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் இந்தியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகிலேயே இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கும் காசிரங்கா காடுகள் , அஸ்ஸாமின் சுற்றுலாச் சிறப்புகளில் முன்னிலை வகிப்பவை. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குள்ளன. இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்

ஜேடிங்கா - பறவைகள் சரணாலயம்.

சோனிட்பூர் – தேசியப்பூங்கா

சிவசாகர் - தேயிலைத் தோட்டங்கள்

ஹஜோ - புனிதத்தலம்