டார்ஜீலிங்
(Darjeeling ) என்ற பெயருடன் கூடிய நகரம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது. டார்ஜீலிங் மாவட்டத்தின் தலைநகரமாகவும் இந்த நகரம் திகழ்கிறது.
டார்ஜீலிங்
அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே நிலையத்திற்கும் உலகப்புகழ் பெற்றதாகும். இது யுனெஸ்கோ அறிவித்த உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும். ஆங்கிலேயர்கள் மேம்படுத்திய ஒரு பகுதியில், கடந்த 19 ஆம் நூற்றாண்டில் இங்கு தேயிலை பயிரிட்டார்கள். அந்த பகுதியில் தேயிலை வளர்த்தவர்கள் கருப்பு தேயிலையினுடைய தனித்தன்மை வாய்ந்த கலப்பினம் மற்றும் நொதித்தல் முறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தினார்கள், இம்முறையிலான அநேக கலப்பினங்கள் உலகிலேயே மிகச்சிறந்தவையாக கருதப்படுகின்றன. இங்குள்ள டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே இம்மாநிலத்தில் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ள நகரங்களை இணைக்கிறது. இது உலக பாரம்பரியம் மிக்க இடமாக 1999 ஆம் ஆண்டில் புகழ்பெற்றது. இந்தியாவில் இயங்கிவரும் சில பழங்காலத்து புகை வண்டிகளில் எஞ்சிய ஒரு புகை வண்டி இங்கு இன்றுமியங்கி வருவதை நாம் காணலாம். நீராவி தொடர்வண்டிகளுள் ஒன்று தற்பொழுதும் இங்கு இயங்கி வருகிறது.
இது
மஹாபாரத் மலைத்தொடர் அல்லது இமாலயத்தை விட சற்று குறைவான சராசரி உயரம் உடையது. இந்தியாவை பிரித்தானியா ஆட்சி புரிந்த காலக்கட்டத்தில், டார்ஜீலிங்கின் மிதமான தட்பவெப்பநிலை அங்கிருந்த பிரித்தானிய மக்களுக்கு கோடை காலங்களில் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்கான புகலிடமாக அமைந்தது, அதுவே மலைவாழிடமாக (மலை நகரம்) இது வளர்ச்சியுறுவதற்கு காரணமாக அமைந்தது. இதனால் டார்ஜீலிங் கோடைகால தலைநகரம் என்று வழங்குகிறது.
டார்ஜீலிங்கில்
பெரும்பாலான பொதுப் பள்ளிகள், பிரிட்டிஷ் முறை கல்வியை பின்பற்றுவதால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் அண்டை நாடுகளில் இருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. கலிம்போன்ங்கின் அருகே இணைந்துள்ள முக்கிய மையமான இந்நகரம், 1980 ஆம் ஆண்டிலிருந்து கூர்க்காலாந்து என்னும் தனி மாநில கோரிக்கையை முன்வைத்துள்ளது, இருப்பினும் இந்த பிரிவினை இயக்கம் டார்ஜீலிங் கூர்க்கா மலைக்குழு அமைப்பு காரணமாக படிப்படியாக கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது. சமீப ஆண்டுகளில் இந்நகரம், சூழ்நிலை வள ஆதாரங்களைத் தடுக்கக்கூடிய
வளர்ந்துவரும் சுற்றுலா போக்குவரத்து மற்றும் மோசமாக திட்டமிடும் நகர்மயமாக்கல் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பு காரணமாக அழியத்தக்க சூழலுக்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளது.
கோடை
மற்றும் இளவேனிற் காலங்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த புகழ்பெற்றதாகும், இதன்மூலம் அநேக டார்ஜீலிங் மக்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர், பலர் உணவுவிடுதிகளில் பணியாற்றி சம்பாதிக்கின்றனர். அநேக மக்கள் சுற்றுலா நிறுவனங்களின் வழிகாட்டிகளாக பணியாற்றி பொருளீட்டுகின்றனர். டார்ஜீலிங் பாலிவுட் மற்றும் வங்காளி திரைப்படத்தளமாகவும் புகழ்பெற்றுள்ளது. ஆராதனா (1969) படத்தின் மேரே சப்னோ கி ராணி என்னும்
பாடல் ராஜேஷ் கண்ணா மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோர் நடிக்க டார்ஜீலிங் இமாலயன் இரயில்வேயில் படமானது. சத்யஜித்ரே படமான கன்சென்ஜுங்கா (1962) இங்கு படமானது, அவரது 'ஃபெலுடா தொடர்கள்', கதை, டார்ஜிலிங் ஜோம்ஜோமாட் (டார்ஜிலிங்கின் ராஸல் டாஸல்) ஆகிய படங்களும் இந்நகரத்தில் படமானது. சமீப காலத்தில் ஷாருக் கான் நடித்த மே ஹூ நா
படமும் இங்கு படமானது. மாவட்ட தலைநகரான டார்ஜிலிங்கில் பலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். வங்காளம், சிக்கிம், திபெத் ஆகிய பழமையான கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பேணுவதன் மூலமும் மக்கள் சம்பாதிக்கிறார்கள்.
போக்குவரத்து
சிலுகுரி
யிலிருந்து டார்ஜீலிங் நகரத்தின் 50 மைல்கள் (80 கி.மீ) தொலைவைடார்ஜீலிங்
இமாலயன் இரயில்வே (”பொம்மை இரயில்” என்னும் புனைபெயர் கொண்டது) மூலம் அடையலாம், அல்லது இரயில் பாதையை தொடர்ந்து வரும் ஹில் கார்ட் சாலை (தேசிய நெடுஞ்சாலை 55) வழியாகவும் செல்லலாம். டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே ஒரு 60 cm (24 in) குற்றகலப்பாதை இரயில்வே ஆகும். 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ இந்த இடத்தை உலக பாரம்பரியம் மிக்க இடம் என அறிவித்துள்ளது., உலகிலேயே இந்த
பெருமையை பெற்ற இரண்டாவது இரயில்வே இதுவே. முறையான பேருந்து சேவைகள், வாடகை வண்டிகள் ஆகியவை டார்ஜீலிங், சிலிகுரி யுடன் அதன் அருகமைந்த நகரங்களான குர்சியாங், கலிம்போன்ங், கங்டாக் ஆகிய நகரங்களை இணைக்கிறது.லேண்ட் ரோவர் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள், அப்பகுதியின் செங்குத்தான சரிவுகளில் பயணிக்க எளிமையாக இருப்பதால் போக்குவரத்துக்கு புகழ்பெற்றவையாக உள்ளன. இருப்பினும், மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகள் காரணமாக சாலை மற்றும் இரயில்பாதை தொடர்புகள் அடிக்கடி இடையூறுக்கு உள்ளாகின்றன. டார்ஜீலிங்கிற்கு அருகமைந்த சிலுகுரிக்கு, மிக அருகாமையிலேயே பாக்டோரா விமானநிலையம் உள்ளது.93 km (58 mi) இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் ரெட் ஆகிய மூன்று முக்கிய விமான சேவை நிறுவனங்கள் டார்ஜீலிங்குடன் டெல்லி, கல்கத்தா, குவகாத்தி ஆகிய நகரங்களை இணைக்கிறது. இதன் அருகமைந்த மிகப்பெரிய இரயில்நிலையம் நியூ ஜல்பைகுரி இரயில்நிலையம் ஆகும், இது பெரும்பாலும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. நகரத்துக்குள் அமைந்த இடங்களுக்கு, வழக்கமாக மக்கள் நடந்தே செல்கின்றனர். வசிப்பிடங்களில் உள்ளோர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டி, இருசக்கர வாகனம் அல்லது வாடகை தானுந்துகள் மூலம் பயணிக்கின்றனர். டார்ஜீலிங் கயிற்றுப்பாதை 1968 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இயங்கியது, ஒரு விபத்தில் நான்கு பேரின் உயிரிழபிற்குப்பிறகு நின்றுவிட்டது.