“பழத்தை சுவைக்கும் முன்பே...” டிரெய்லர் சர்ச்சை பற்றி ஓவியா
தனது 90 எம் எல் பட டிரைய்லர் சர்ச்சையில் சிக்கியது குறித்து நடிகை ஓவியா விளக்கமளித்துள்ளார்.

18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் 1 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில் இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்த டிரெய்லர்.


சிலர் ஓவியாவின் துணிச்சலைப் பாராட்டினாலும், பலர் இந்தப் படத்தின் மூலம் ஓவியா தனது நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டாரே என திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சை டீசர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் நடிகை ஓவியா. அதில் அவர், "பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.


இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கைக்குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.