திற்பரப்பு அருவி

சுற்றுலா தளங்கள் / இந்தியா

திற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.

திற்பரப்பு அணை


திற்பரப்பு அணை கோதையாறு திட்டத்தின் கீழ் 1951-இல் திற்பரப்பில் கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணையால் 358.9 கெக்டேர் நிலப்பரப்பு பாசனம் அடைகிறது.


திற்பரப்பு அருவி அருகிலுள்ள கோவில்


திற்பரப்பு அருவியிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள் அமைந்துள்ளன.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க