சிறுவாணி அணை
சிறுவாணி அணை என்பது கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 46 கி. மீ தொலைவில் அமைந்துள்ள அணையாகும். இந்த அணை தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி நதிக்குக் குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணையைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். முத்திகுளம் மலை இந்த அணைக்குக் கிழக்கு புறம் அமைந்துள்ளது. இயற்கையான நீர்வீழ்ச்சி இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். அணையும் நீர்வீழ்ச்சியும் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.