கல்வராயன் மலைகள்
கல்வராயன் மலைகள்

கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி. பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்று குறிபிடபடுகின்றது. 'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டவை.


கல்வராயன்மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. பூங்காவில் பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளன.மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழம் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் படகில் சென்று வரலாம். காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.

பெரியார் அருவி

பெரியார் நீர்விழ்ச்சி , தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள கோமுகி அணைக்கு அருகில் அமையப்பெற்றுள்ளது. கோமுகி அணையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் துரத்தில் வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நீர்வீழ்ச்சி, கள்ளக்குறிச்சியிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் சாலையோரமாக அமைந்துள்ளது.


பெரும்பான்மையான நாட்களில் குறைந்த அளவே நீரின் அளவு இருக்கும். மழை பருவ காலங்களில் நீரின் வீழ்ச்சி அளவு மிகவும் அதிகமாக இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பருவ காலங்களில் இங்கு வந்து இதன் அழகை ரசித்தும், நீர்விழ்ச்சியில் குளித்தும் செல்கின்றனர். செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, இங்கு வந்து செல்ல உகந்த காலமாகும். பல்வேறு மூலிகைச் செடிகள் இப்பகுதிகளில் கிடைக்கின்றன.

பெரியார் நீர்விழ்ச்சியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் துரத்தில் மேகம் நீர்விழ்ச்சி அமையப்பெற்றுள்ளது.

கோமுகி அணை

கோமுகி அணை (Gomukhi dam) தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கச்சிராயபாளையம் என்ற ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஓர்அணையாகும்.


சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை மீதமர்ந்து நேரு சவாரி செய்யும் சிலை, குறள் எழுதும் திருவள்ளுவர் சிலை, சிவபெருமான் சிலை, காளை மாடு, உழைப்பாளி சிலைகள், கண்கவர் விளக்குகள், காட்சி மேடைகள் இருக்கின்றது. அருகில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. கல்வராயன் மலைக்கு சுற்றுலா செல்பவர்கள் கோமுகி அணையையும் ரசித்துவிட்டு செல்லலாம். கல்வராயன்மலையில் உள்ள பெரியார் அருவி, மேகம் அருவி, வெள்ளி அருவிகளை காண்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் கோமுகி அணைக்கும் வந்து செல்கின்றனர்.