இரஞ்சன்குடி கோட்டை
இரஞ்சன்குடி கோட்டை

ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும்.

கி.பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும்(சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம். முகலாய மன்னர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.


இக் கோட்டையின் சுவர்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புக்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக் கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக் கம்பம் ஆகியவை உள்ளன.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH 45) பெரம்பலூருக்கு வடக்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மங்களமேடு காவல் நிலையத்தின் எதிரில் உள்ள பாதையில் சென்றால் ரஞ்சன்குடி கோட்டையை எளிதில் அடையலாம்.