உமைத் பவன் அரண்மனை
உமைத் பவன் அரண்மனை இந்தியாவின் அதிக கம்பீரமான அரண்மனைகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரண்மனைகள் பலவற்றுள் மிகவும் அண்மைகாலத்ததாகவும் இருக்கிறது. இதன் ஏராளமான கலை வேலைப்பாடு நினைவுச்சின்னமானது தற்போதும் அங்கு ஒரு அரசர் வாழ்ந்து வருவது போன்ற கற்பனையை நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு நீண்ட பஞ்ச காலத்தின் போது பொது நிவாரணம் மற்றும் பணியாளர் செயல்திட்டமாக இந்த அரண்மனைக் கட்டப்பட்டது. அரண்மனையின் கட்டுமானப் பணியின் போது ஒரு மில்லியன் சதுர அடிக்கு (90,000 m²) மேலான தரமான சலவைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சிட்டார் மணற்கல் என அழைக்கப்படும் ஒரு சிறப்புவகை மணற்கல் அரண்மனைக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அது ஒரு சிறப்பான விளைவைக் கொடுத்தது. இந்தக் காரணத்திற்காக உள்ளூர் மக்களால் இது சிட்டார் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கட்டமைப்பின் பாணியானது அழகான மேல்மாடம், கவர்ச்சிமிக்க முற்றங்கள், பசுமைத் தோட்டங்கள் மற்றும் மதிப்புவாய்ந்த அறைகளுடன், இந்தோ-சாராசெனிக் கட்டடக்கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்தச் செயல்திட்டத்திற்கு 15 ஆண்டு காலங்களுக்கு மேல் (1929-1943) 3,000 கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த அரண்மனையைக் கட்டிய மகாராஜா உமைத் சிங்கின் (1876-1947) பெயரே பிறகு இதற்கு இடப்பட்டது. இவர் கட்டடக் கலைஞர்களுக்கான பிரிட்டிஷ் ராயல் கல்வி நிறுவனத்தின் அவைத்தலைவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டில் இந்த அரண்மனையானது அரசக் குடியிருப்பு, பாரம்பரியமானத் தங்கும் விடுதி மற்றும் அருங்காட்சியகம் எனப் பிரிக்கப்பட்டது. இது மொத்தமாக 347 அறைகளைக் கொண்டுள்ளது. இது உலகத்தின் மிகப்பெரிய தனியாளர் குடியிருப்பாகும். பழங்கால அறைக்கலனுடன் இங்குள்ள 98 குளிர்சாதன அறைகளும் நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐந்து நட்சத்திரத் தங்கும் விடுதியில் உள்ளதைப் போன்று அனைத்து வசதிகளும் இக்குடியிருப்பில் உள்ளன.