பெங்களூர் அரண்மனை
பெங்களூர் அரண்மனை

பெங்களூர் அரண்மனை பெங்களூரில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இங்கிலாந்தில் அமைந்துள்ள விண்ட்ஸர் கேஸ்டில் என்னும் அரண்மனையை மாதிரியாய் கொண்டு அரண்மனை கட்டப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனை, சுற்றிலும் மரங்கள், தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, கோபுரங்கள் என கலைநயத்துடன் 430 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் மிகப் பெரிய கேளிக்கை அரங்கு உள்ளது. முதல் தளத்தில் தர்பார் அறை என்னும் அரசவை உள்ளது. தர்பார் அறையின் இருபுறங்களிலும் ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. இந்த அறையில்தான் ராஜாங்க அலுவல்கள் எல்லாம் நடக்கும். நாற்காலிகள், மேஜைகள் எல்லாம் சீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனை பெங்களூர் சென்ட்ரல் உயர்நிலைப்பள்ளியின் முதன் முதல்வராக இருந்த ரெவ். காரெட் என்பவரால் கட்டப்பட்டது. கி.பி 1862 ல் தொடங்கி 1944 ல் முடிக்கப்பட்டது. கி.பி 1884ல் இதனைக் கட்டுவதற்கான பொறுப்பை ஏற்றார் மைசூர் மஹாராஜா சாம்ராஜ் உடையார். தற்சமயம் ஸ்ரீகண்ட தத்தா நரசிம்ம உடையார் அவர்களின் வசம் அரண்மனை உள்ளது. நாற்காலிகள், மேஜைகள் எல்லாம் சீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் நுழைவுக் கட்டணம் இந்தியர்களுக்கு ரூ. 225. வெளிநாட்டவர்களுக்கு ரூ. 450.


அரண்மனையின் காலியாக உள்ள நிலப்பரப்புக்கள் இசை நிகழ்ச்சிகள் உட்பட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது . உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ராக் இசைப்பாடகர்கள் பலரும் இங்கே நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அதுதவிர கலை, இலக்கிய, சினிமா, வணிக பொருட்காட்சி, அரசியல் மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகள் அரண்மனையில் அமைந்துள்ள பரவலான மைதானத்தில் நடத்தப்படுகிறது. சந்திரமுகி போன்ற பல திரைப்படங்கள் இந்த அரண்மனையில் எடுக்கப்பட்டுள்ளன.