வட்டப்பாறை அருவி

சுற்றுலா தளங்கள் / இந்தியா

வட்டப்பாறை அருவி

வட்டப்பாறை அருவி (Vattaparai Falls) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி என்ற சிற்றூருக்கு ( அ. கு. எண் 629852) அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட கீரிப்பாறை வனப்பகுதியில் பாயும் பழையாற்றின் ஒரு அருவியாகும். இது : 8°15.919′N 77°27.062′E, 40 மீ (130 அடி), உயரத்தில் உள்ளது. இது நாகர்கோயிலில் இருந்து 25 கி.மீ (16 மைல்) வடக்கிலும், கன்னியா குமரியில் இருந்து 32 கி.மீ (20 மைல்) வடமேற்கிலும், உள்ளது இங்கு உள்ள 20 கி.மீ2 (7.7 சதுர மைல்) பரப்பளவுள்ள பகுதியை சரணாலயமாக மாற்றும் திட்டம் உள்ளது. 

இந்தப் பகுதியில் சில சிறிய அருவிகள் உள்ளன - இதில் உள்ள அழகிய அருவிகளில் குறிப்பிடத்தக்கவை வட்டப்பாறை அருவி, கலிகேசம் அருவி போன்றவை ஆகும். இங்கு அருவியை அடுத்து ஒரு சிறிய காளி கோயில் உள்ளது. இந்த இடம் மிக அமைதியானதாகவும், வளர்ச்சியடையாததாகவும் உள்ளது. இங்கு ஒரே ஒரு சிறிய தேனீர் கடை மட்டுமே உள்ளது. இங்குள்ள மழைக்காடுகளில் உள்ள சிறிய மலை ஓடைகள், கூழாங்கள்கள், தாவரங்கள் ஆகியவற்றின் அழகை கண்டு மகிழலாம். அருவியின் அனைத்து பக்கங்களும் காடுகளால் சூழப்பட்டு, விலங்குகள் நடமாட்டமும் கொண்டதாக உள்ளது. நீண்ட மாசற்ற ஓடைகளில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஓடைகளில் உள்ள நீர் மருத்துவ குணம்வாய்ததாக கருதப்படுகிறது.

இந்த ஒரு அழகான மற்றும் அமைதியான இடமாக உள்ளது. இது தற்போது கெடுவாய்ப்பாக நெரிசலான சுற்றுலாத்தளமாக மாறிவருகிறது. இந்த மாவட்டத்தில் கோடையாற்றில் உள்ள திற்பரப்பு அருவி ஒரு புகழ்வாய்ந்த்த அருவியாக உள்ளது.Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க