குன்டாலா அருவி
தெலுங்கானா ,நரிடிகொன்டா மண்டலம் காதிம் நதியில் அமைந்துள்ளது இவ்வருவி. 147அடி உயரம் கொன்ட இவ்வருவி, தெலுங்கானா மாநிலத்தின் உள்ள மிக உயர்ந்த அருவி.இவ்வருவி, கோன்டுகள் வாழும் அடர்ந்த காடுகளின் உள்ளே அமைந்துள்ளது. கோன்டி மற்றும் தெலுங்கில் குன்டா என்றால் குளம் என்று பொருள். குன்டலு என்றால் குளங்கள் என்று பொருள். பல குளங்களின் நீர், ஆறாக மாறி பின்னர் அருவியாக விழுகிறது.

காதிம் நதியின் மூலம் உருவாகிய குன்டாலா அருவி இரண்டு அடுக்காக விழுகிறடது. மேலும், உச்சபட்ச மழையின் போது இரண்டு தனித்தனி அருவிகளாக விழுகிறது. ஹைதிராபாத்தில் இருந்து செல்லக்குடிய பிரபலமான பொழுதுபோக்கிடமாகும். இருசக்கர வாகனத்தில் அருவியின் நுழைவாயில் வரை சென்று அங்கிருந்து அருவியை சென்றடைய படிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலிருந்து அருவி, 10நிமிட தூரத்தில் உள்ளது.