அதிரப்பள்ளி அருவி
அதிரப்பள்ளி அருவி

அதிரப்பள்ளி அருவி (Athirappilly Falls) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். 24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையாறு காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ளது. இந்த அருவிக்கு மேற்பகுதியிலுள்ள சாலக்குடி ஆற்றில் அணை கட்ட கேரள அரசு முன்மொழிந்த திட்டம் சர்ச்சையை கிளப்பியது. 1990 முதல் 2007 வரை இச்சர்ச்சை நீடித்தது.


அதிரப்பள்ளி அருவிக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவிலுள்ள சாலக்குடியில் உள்ளது ஆகும். வானூர்தி நிலையம் 54 கிமீ தொலைவிலுள்ள கொச்சி பன்னாட்டு நிலையமாகும். திருச்சூர் 58 கிமீ தொலைவில் உள்ளது. சாலக்குடியில் இருந்து வாடகை மகிழுந்துகள் மூலமும் பேருந்துகள் மூலமும் இவ்வருவிக்கு எளிதில் செல்லலாம். கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயாகரா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.


இந்த அருவிக்கு இந்தியா முமுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கிட்டத்தட்ட ஆண்டுக்கு 7 மில்லியன் சுற்றுலா பயனிகள் வந்து செல்வதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தின் நீர் வரத்து நன்கு இருக்கும் என்பதால் அப்போது செல்வது சிறந்ததாகும்.