90 எம்.எல் படத்தின் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஓவியா
சென்னை: 90 எம்.எல். படத்தில் கவர்ச்சி உடை அணிந்து இரட்டை அர்த்த வசனங்கள் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஓவியா. அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படம் வரும் மார்ச் 1ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஓவியா கவர்ச்சியாக உடை அணிந்து ஆபாச வசனங்கள், இரட்டை அர்த்த வசனங்களை பேசியுள்ளார். ஓவியா இப்படி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
ரசிகர்கள் எதிர்பார்ப்பதை கொடுப்பது என் கடமை. அவரவர் விரும்பும் உடையை அணியலாம். இந்த உடை தான் அணிய வேண்டும் என்று யாரும் கூற முடியாது. 90 எம்.எல். ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் ஆகும்.
கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் ஏற்ப நடிப்பது தவறு எதுவும் இல்லை. என் கதாபாத்திரத்திற்கு தேவையானதை தான் செய்துள்ளேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. புகைப்பிடித்தால் என்னவாகும் என்பதை தியேட்டர்களில் வரும் விளம்பரங்களில் பார்த்து அந்த பழக்கத்தை விட்டேன்.
90 எம்.எல். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்திருக்கிறேனே தவிர ஆபாசமாக இல்லை. எனக்கு காதல் மீது நம்பிக்கை உள்ளது ஆனால் திருமணத்தின் மீது இல்லை. என்னை 4 பேர் அரசியலுக்கு அழைத்தார்கள். நான் தான் மறுத்துவிட்டேன் என்றார் ஓவியா.