50 நாள் சார்ஜ் வரை நிற்கும் ஸ்மார்ட்போன்
பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீசை மையமாக கொண்டு ஆவெனிர் டேலிகாம் என்ற எஜெனர்ஜிஸர் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பார்ப்பதற்கு பவர் பேங் போல காட்சியளிக்கும். இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பு அம்சமே பேட்டரி தான்.


50 நாள் சார்ஜ் நிற்கும்:

ஒரு முறை சார்ஜ் செய்தால், குறைந்தது 50 நாள் பேட்டரி சார்ஜ் நிற்கும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18000 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 18,000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான ஐபோன் எக்ஸ்எஸ்ஓ-ல் 2658 எம்ஏஹெச் பேட்டரி தான் இருக்கின்றது.

இதில் அதிக சக்தி கொண்ட பேட்டரி என்பதால் இந்த ஸ்மார்ட்பேன் எடை கூடுதலாக இருக்கும் .

இதில் 6.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் 3 பின்பக்க கேமரா என்று நவீனஸ்மார்ட் போன் போல அனைத்து விஷயங்களையும் இந்த எஜெர்ஜிஸெர் கொண்டுள்ளது.


46 மணி நேரம் வீடியோ பார்க்லாம்:

ஒரு நிமிடம் கூட இடைவிடாமல் 2 நாள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் வரை சார்ஜ் நிற்கும் என்றும் 4 நாட்கள் இடைவிடாமல் கால் பேசிக் கொண்டே இருக்கும் வரை சார்ஜ் நிற்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை எந்த பயன்பாடும் இல்லாமல் பயன்படுத்தி வந்தால், தொடர்ச்சியாக 50 வரை சார்ஜ் நிற்கும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை விலையை இந்த நிறுவனம் அறிக்கவில்லை.