சொந்த ஊரான ராமநாதபுரத்தில் கமல் போட்டி
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியிலும் சேராமல், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கமல் முடிவு செய்துள்ளார் என்று அவரது கட்சி உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து விருப்ப மனு பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதில் ராமநாதபுரம் தொகுதியில் கமல் நிற்க வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் பலர் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து கட்சியினர் கூறி இருப்பதாவது:
கிராமசபை கூட்டங்களின்போது மக்கள் தரும் உற்சாகமே அவருக்கு தேர்தலில் தனித்து போட்டியிடும் துணிச்சலை தந்திருக்கிறது. சிறந்த வழக்கறிஞர். மக்களிடையே நன்மதிப்பு பெற்றவர். எனவே, கமல் இத்தொகுதியில் வெற்றிபெற்றால் மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.