13 ஆண்டுகள் கழித்து தனுஷ் ஜோடியாகும் சினேகா
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் கொடி படம் புகழ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.


துரை செந்தில்குமார், தனுஷ் இரண்டாவது முறையாக சேரும் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். அதில் ஒரு தனுஷுக்கு சினேகா ஜோடியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் தனுஷுடன் நடத்திருந்தார் சினேகா. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து தற்போது நடிக்கவிருக்கிறார்.