நாடாளுமன்றக் குழு: கனிமொழி ராஜினாமா; அதே பதவிக்கு தயாநிதி மாறன் நியமனம்
திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தின் தரவு பாதுகாப்புக் குழுவில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து, அதே பதவிக்கு திமுக எம்.பி தயாநிதி மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட தரவுப் பாதுகாப்புக்கான கூட்டு குழுவில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடமாற்றங்களை மக்களவையில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பிபி சவுத்ரியால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

அண்மையில், பிரதமர் மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து மாற்றி அமைத்தார். அதில் ஒரு எம்.பி தரவு பாதுகாப்பு குழுவில் இருந்து ராஜினாமா செய்தார். ஒரு எம்.பி ஓய்வு பெற்றார். திமுக எம்.பி கனிமொழி குழுவில் இருந்து விலகினார். முன்னதாக, குழுவின் தலைவர் மீனாட்சி லேகி, அமைச்சரானார். கமிட்டியின் மற்ற உறுப்பினர்களான அஷ்வினி வைஷ்ணவ் இப்போது ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருக்கிறார்; தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் பூபேந்தர் யாதவ், பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பாட், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் அமைச்சரானார்கள்.

இந்த குழுவில் அறிவிக்கப்பட்ட 7 இடமாற்றங்களில், 5 பேர் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் திமுகவைச் சேர்தவர், மற்றொருவர் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை எம்.பி தயாநிதி மாறன் மக்களவை சபாநாயகரால் இந்த குழுவுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ராம் கோபால் யாதவ் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ஆவார். ராஜ்யசபா எம்.பி.க்கள் ராகேஷ் சின்ஹா ​​சுதன்ஷு திரிவேதி மற்றும் வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோரும் முதல் முறையாக எம்.பி ஆகியுள்ளனர்.

மீனாட்சி லேகியின் தலைமையின் கீழ் உள்ள இந்தக் குழு, 2019 டிசம்பரில் நியமிக்கப்பட்டதில் இருந்து 66 கூட்டங்களை நடத்தியுள்ளது. மேலும், லேக்கியை அமைச்சராக்குவதற்கு முன்பு இந்த குழு அதன் அறிக்கையை இறுதி செய்யும் பணியில் இருந்தது.

இந்த குழு வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் வரை செல்லுபடியாகும், இந்த குழு இந்த முறையுடன் குறைந்தது மூன்று முறையாவது நீட்டிப்பு செய்ய கோரியுள்ளது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா 2019 மக்களவையில் அன்றைய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலின் பேரில் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

நவம்பர் 2019 முதல் இந்த மசோதாவின் உட்பிரிவை விவாதித்து வந்த இந்த குழு, மொத்தம் 158 மணிநேரம் மற்றும் 45 நிமிட காலம் விவாதத்திற்கு உட்படுத்தியது. இதன் விளைவாக அசல் மசோதாவில் 89 திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் 86, 46 உட்பிரிவுகள் மற்றும் இரண்டு அட்டவணைகள், மேலும் ஒரு உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.