பொதுத் துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்தரா வங்கி மற்றும் கார்ப்ரேசன் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வங்கியில் 347 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 10 வகையான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 03.09.2021 கடைசி தேதியாகும்.
முதுநிலை மேலாளர் (Risk)
காலியிடங்களின் எண்ணிக்கை – 60
வயதுத் தகுதி: 30 முதல் 40 வயது வரை
கல்வித் தகுதி: CA/CMA (ICWA)/CS, MBA மற்றும் கணிதம், புள்ளியியல், பொருளாரதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ.63840
மேலாளர் (Risk)
காலியிடங்களின் எண்ணிக்கை – 60
வயதுத் தகுதி: 25 முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: CA/CMA (ICWA)/CS/MBA/ கணிதம் அல்லது புள்ளியியல் அல்லது பொருளாரதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 48170
மேலாளர் – அந்நிய செலாவணி (Forex)
காலியிடங்களின் எண்ணிக்கை – 50
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 48170
உதவி மேலாளர் – அந்நிய செலாவணி (Forex)
காலியிடங்களின் எண்ணிக்கை – 120
வயதுத் தகுதி: 20 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 36,000
உதவி மேலாளர் (Technical Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை – 26
வயதுத் தகுதி: 20 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 36,000
மேலாளர் (Chartered Accountants)
காலியிடங்களின் எண்ணிக்கை – 14
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: Chartered Accountant படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 48,170
மேலாளர் (Civil Engineers)
காலியிடங்களின் எண்ணிக்கை – 07
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: B.E/B.Tech. Degree in Civil Engineering மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 48,170
மேலாளர் (Architects)
காலியிடங்களின் எண்ணிக்கை – 07
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: இளங்கலை Architecture படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 48,170
மேலாளர் (Electrical Engineers)
காலியிடங்களின் எண்ணிக்கை – 02
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: B.E./B.Tech. in Electrical Engineering படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: ரூ. 48,170
மேலாளர் (Printing Technologists)
காலியிடங்களின் எண்ணிக்கை – 01
வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: B.E./ B. Tech in Printing Technology படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: ரூ. 48,170
இந்த பணியிடங்களுக்கான வயது தகுதியில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை
ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்படும். ஆன்லைன் எழுத்து தேர்வில்,
திறனறிதல் (Reasoning) – 50 வினாக்கள்
கணிதம் (Quantitative Aptitude) – 50 வினாக்கள்
ஆங்கிலம் (English Language) – 50 வினாக்கள்
பாட அறிவு (Professional knowledge relevant to the post) – 50 வினாக்கள்
என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
OBC மற்றும் பொது பிரிவினருக்கு ரூ. 850
SC/ST/ PWBD பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx அல்லது
https://ibpsonline.ibps.in/ubirscoaug21/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2021
மேலும் விவரங்களுக்கு
https://www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20-%20ENGLISH%202021-22%20FINAL.pdf என்ற இணைய பக்கத்தை பார்வையிடவும்.