ஆதார் தொடர்பான 2 முக்கிய சேவைகளை நிறுத்திய UIDAI
முகவரி சான்று சரிபார்ப்பு கடிதம்

ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை புதுப்பிக்க முகவரி சரிபார்ப்பு கடிதம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை UIDAI இந்த சேவையை நிறுத்தியுள்ளது. முகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான விருப்பம் UIDAI இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அல்லது நீண்ட காலத்துக்கு பணி மாற்றம் செய்பவர்கள் ஆகியோருக்கு இப்போது ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

பயனர்கள், செல்லுபடியாகும் மற்ற முகவரி சான்றுகளின் பட்டியலிலிருந்து (https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf) ஏதேனும் ஒரு முகவரி சான்று மூலம் தங்கள் முகவரியை புதுப்பிக்கலாம்.

ஆதார் அட்டை மறுபதிப்பின் பழைய பாணியும் மூடப்பட்டது

UIDAI பழைய பாணியில் ஆதார் அட்டை மறுபதிப்பு சேவையை நிறுத்தியுள்ளது. இப்போது பழைய அட்டைக்கு பதிலாக, UIDAI பிளாஸ்டிக் PVC கார்டுகளை வெளியிடுகிறது. இந்த அட்டையை உங்களுடன் எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும். இது ஒரு டெபிட் கார்டு போன்று இருக்கிறது.

ட்விட்டரில் ஒரு பயனரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஆதார் உதவி மையம் இந்த தகவலை ட்வீட் செய்தது. பயனர்கள் ஆன்லைனில் ஆதார் பிவிசி கார்டை ஆர்டர் செய்யலாம். அதே நேரத்தில் இ-ஆதார் பிரிண்ட் அவுட் எடுத்து காகித வடிவில் வைத்துக் கொள்ளலாம் என்று ஆதார் உதவி மையம் தெரிவித்துள்ளது.