அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு - டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோயம்புத்தூர், கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய மண்டலங்களில் நிரப்பட உள்ளன. மொத்தம் 234 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2021
பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 92 (மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் : 88, சிவில் : 4)
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பொறியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.4984
பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 142 (மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் : 138, சிவில் : 4)
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.3582
பயிற்சி கால அளவு : 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை : டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் BOARD OF APPRENTICESHIP TRAINING (SOUTHERN REGION) என்பதை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.