தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை - 12th மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி துறைமுகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கான பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 விதமான பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) மெக்கானிக் (டீசல்), எலக்ட்ரீஷியன், மெக்கானிக் (மோட்டார் வாகனம்), ஃபிட்டர், வெல்டர், வரைவாளர் (மெக்கானிக்கல்), PASAA (நிரலாக்க மற்றும் அமைப்பு நிர்வாக உதவியாளர்) போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30 செப்டம்பர் 2021 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

மெக்கானிக் – டீசல் (Mechanic – Diesel)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் மெக்கானிக் – டீசல் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 2 வருடங்கள்

சம்பளம் : முதல் வருடம் ரூ. 6,700, இரண்டாம் வருடம் ரூ. 7,550

எல்க்ட்ரீசியன் (Electrician)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் எல்க்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம்

சம்பளம் : ரூ. 7,350

மெக்கானிக் – மோட்டார் வாகனம் (Mechanic  – Motor Vehicle)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் மெக்கானிக் – மோட்டார் வாகனம் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம்

சம்பளம் : ரூ. 7,350

பிட்டர் (Fitter)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் பிட்டர் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம்

சம்பளம் : ரூ. 7,350

வெல்டர் (Welder)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் வெல்டர் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம்

சம்பளம் : ரூ. 6500

வரைவாளர் – மெக்கானிக்கல்(Draughtsman – Mechanical)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் வரைவாளர் – மெக்கானிக்கல் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம்

சம்பளம் : ரூ. 7,350

PASSA (Programming and System Administration Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் COPA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம்

சம்பளம் : ரூ. 7,350

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Create%20a%20searchable%20grayscale%20PDF%20file_1_20210914124155470.PDF என்ற இணையதளத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

Chief Mechanical Engineer,
V.O. Chidambaranar Port Trust,
Tuticorin – 628 004.

விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021.