5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி... மீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்...
தலைநகர் டெல்லியின் தென்கிழக்கு பகுதியான படர்பூரில் உள்ள மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு பிளாட்டில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடைப்படையில் அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷ் (30), அஹ்சன் (30), சுனித் குமார் சின்ஹா (37), முகேஷ் (42), மற்றும் முகமது ஷாஜாத் (32) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்த இரண்டு மடிக்கணினிகள், 13 மொபைல் போன்கள், ஒரு டிவி மற்றும் ரூ .52,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த சூதாட்டத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.