தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு... 8th, 10th தகுதி
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) எலக்ட்ரீசியன் மற்றும் வயர்மேன் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB), தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் எலட்க்டீரிசியன் மற்றும் வயர்மேன் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளி வந்துள்ளது. மொத்தம் 50 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
எலக்ட்ரீசியன் (Electrician)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 7,000 – 8,050
பயிற்சி கால அளவு : 23 மாதங்கள் (இதில் அடிப்படை பயிற்சி 6 மாதங்கள் மற்றும் வேலை சார்ந்த பயிற்சி 17 மாதங்கள்)
வயர்மேன் (Wireman)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 7,000 – 8,050
பயிற்சி கால அளவு : 25 மாதங்கள் (இதில் அடிப்படை பயிற்சி 6 மாதங்கள் மற்றும் வேலை சார்ந்த பயிற்சி 19 மாதங்கள்)
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதளப் பக்கங்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.