சதம் அடித்ததை ரஜினிக்கு ஸ்டைலாக சமர்பித்த வெங்கடேஷ் ஐயர்...
விஜய் ஹசாரே கோப்பையில் சண்டிகர் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதமடித்த வெங்கடேஷ் ஐயர், அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு சமர்பிக்கும் விதமாக அவரது ஸ்டைலில் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவில் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே தொடர். இந்த விஜய் ஹசாரே தொடர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வெங்கடேஷ் ஐயர் மத்தியப் பிரதேச அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர், ஏற்கெனவே சதமடித்திருந்த நிலையில் சண்டிகர் அணிக்கு எதிராக சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். 113ம் பந்துகளில் 151 ரன்க்ள் அடித்த வெங்கடேஷ் ஐயர், 100 ரன் அடித்தபோது தனது சதத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகரான வெங்கடெஷ் ஐயர், இன்று அவர் சதமடித்ததை ரஜினி ஸ்டைலில் சல்யூட் அடித்தும் ரஜினி ஸ்டைலில் மூக்கு கண்ணாடி அணிந்தும் தனது சதத்தை ரஜினிக்கு சமர்பித்தார்.


விஜய் ஹசாரே கோப்பையில் சதமடித்த வெங்கடேஷ் ஐயர் நடிகர் ரஜினிகாந்த்தின் ஸ்டைலில் அவருடைய பிறந்த நாளில் அவருக்கு சமர்பித்தபோது பதிவான சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி ரசிகர்கள் பலரும் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயரை உற்சாகப்படுத்தி அவரைப் பாராட்டி வருகின்றனர்.