எண்ணம் எப்படியோ...
நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டு இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப் பார்த்தான்.

கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.” என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.,

இரவு முழுவதும் கண் விழித்துத் திருடி இருப்பான் போலத் தெரிகிறது அதனால் தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக் கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .

"காலையிலேயே நன்றாகக் குடித்து விட்டான் போல இருக்கிறது .அதனால் தான் குடி மயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக் கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் அறிஞர் ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத் தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகையச் செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டுச் சென்றார்.

கதையின் மையக் கருத்து.

'நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.!!!''

ஆம்,  தோழர்களே,

நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் மட்டுமே என்றென்றும் நலமாக வாழ்கின்றார்கள்.

அவர்களின் முகத்தில் புன்னகையும், பொலிவும்,  கலகலப்பும் மின்னும் மிளிரும்.

நல்ல எண்ணம் உடையவர்கள் வாழ்க்கையில்
ஒளிமயமாகப் பவனி வருவார்கள்.

ஏனெனில் தூய எண்ணங்கள் நிறைந்த இதயத்தில் தீய சிந்தனைகள் உதயம் ஆவதில்லை.✍🏼🌹