தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் வலசை பறவைகள்... வைரலாகும் சங்குவளை நாரை வைரல் வீடியோ...
செழுமையான நீர் வளம், பாதுகாப்பான இடம், போதுமான தட்பவெட்ப நிலை தான் வலசை பறவைகள் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் தங்கி குஞ்சு பொரித்து பின் தங்களின் தாய்நாடுகளுக்கு திரும்பச் செல்கின்றது. தமிழகத்தில் பறவைகளுக்கு ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடாது என்று தீபாவளி, கார்த்திகை திருநாட்களில் பட்டாசு வெடிக்காத கிராமங்களும் உண்டு.

அப்படியான ஒரு கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. எந்த ஊர், என்ன பறவை என்று கேட்கின்றீர்களா? திருநெல்வேலியில் அமைந்திருக்கும் கூந்தன்குளம் பறவைகள் காப்பகத்தில் தற்போது இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் சங்குவளை நாரை அல்லது பெய்ண்டட் ஸ்டோர்க் பறவைகள் மரங்களில் தங்கியிருக்கும் காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுற்றுச்சூழல் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை பாருங்கள்.

வலசை என்றாலும் கூட கண்டம் விட்டு கண்டம் தாண்டும் நீண்ட வலசைகள் செல்வதில்லை இந்த பறவைகள். தட்பவெட்ப நிலைக்காக நாடு விட்டு நாடு தாண்டும் சங்குவளை நாரைகள் மரங்களில் கூடு கட்டும் தன்மை கொண்டவை.


திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இப்பகுதியில் பறவைகள் வந்து கூடுகட்டி வாழ்வதை பார்த்த மக்கள் அந்த பறவைகளுக்கு தொந்தரவு தரக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்யவில்லை. 1994ம் ஆண்டு இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.