உதயநிதி கூட்டத்தில் பிக்பாக்கெட்....  ரூ1 லட்சம் பறிகொடுத்த தி.மு.க பிரமுகர்...
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகியிடம் இருந்து ரூ.1 லட்சம் பிக்பாக்கெட் அடித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றன.ர்

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுடை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக சென்னையில் ஐஸ்அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ளது. உதயநிதி அலுவலகத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகள், பாக முகவர்கள் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி, பொங்கல் பரிசு பொருட்களை 50 நிர்வாகிகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உதயநிதி பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் பெரிய அளவில் கலந்து கொண்டனர்.

உதயநிதி பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், சேப்பாக்கம் தொகுதி வட்ட செயலாளர் வெங்கடேசன் திமுக நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக ரூ.1 லட்ச ரூபாயை பாக்கெட்டில் வைத்திருந்தார். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திமுக நிர்வாகி வெங்கடேசன் பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளார். தனது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ1 லட்சம் பணம் திருடு போயிருப்பதை அறிந்த வெங்கடேசன், போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார்.

உதயநிதி பங்கேற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த பிக்பாக்கெட் சம்பவத்தில், முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். வீடியோவில், முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் திமுக நிர்வாகி வெங்கடேசனிடம் இருந்து பணத்தை திருடிக்கொண்டு அங்கே இருந்து தப்பி செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து, திமுக நிர்வாகியிடம் ரூ. 1லட்சம் பணத்தை பிக்பாக்கெட் அடித்த அந்த மர்ம நபர் யார், சென்னையில் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஐஸ்அவுஸ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திமுக நிர்வாகியிடம் ரூ1 லட்சம் பிக்பாக்கெ அடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.