நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்
நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்
🔯ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், அடிக்கடி கோயிலுக்கு செல்வதோடு, இறைவனை துதித்து நல் அருள் வேண்டுவதும், பூஜைகள் செய்வதும் வழக்கம்.
ஜோதிடத்தின் மிக முக்கிய விஷயம் நவகிரகங்கள்.
அதற்குரிய மந்திரஞ்களை அழகுத் தமிழில் உச்சரித்து நல்லருளைப் பெற்றிடுவோம்
🔯நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்களை உச்சரித்து வர நம் வாழில் இருக்கும் பிரச்னைகளும், துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சியும், மன நிம்மதியையும் பெற்றிடலாம்.
🔯சூரிய பகவான்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
🔯சந்திர பகவான்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் போற்றி
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி
🔯செவ்வாய் பகவான்
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
🔯புதன் பகவான்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி
🔯குரு பகவான்
குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா க்ரஹ
தோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி
🔯சுக்கிர பகவான்
சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே
🔯சனீஸ்வர பகவான்
சங்கடந் தீரப்பாய் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா
🔯ராகு பகவான்
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியோ ரம்மியா போற்றி
🔯கேது பகவான்
கேதுத்தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீரப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி