ஓ சொல்றியா பாடலுக்கு பிக் பாஸ் தாமரை செம டான்ஸ்...
பிக்பாஸ் பிரபலம் தாமரை, ஓ சொல்றியா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜூ தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானவர் தாமரைச்செல்வி. முதல் இரண்டு வாரங்களிலே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 15 வாரங்கள் தாக்குப்பிடித்து, டாப் 6 இடத்தை பிடித்தார் தாமரை.
இந்நிலையில், தாமரைச்செல்வி மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஜக்கி பெர்ரியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள, இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சமீபத்தில் ஹிட்டான புஷ்பா படத்தில் சமந்தா டான்ஸ் ஆடிய, ஓ சொல்றியா பாடலுக்கு தாமரை, ஐக்கி பெர்ரியுடன் நடனமாடியுள்ளார். அதில், நீங்கள் சுய திருப்தியுடன் இருந்தால், நீங்கள் தான் உலகின் மகிழ்ச்சியான நபர்., என் வார்த்தைகளைக் ஏற்றுக்கொள்ளுங்கள்., தாமரை அக்காவின் முதல் ஷூட்., அக்கா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்., அன்புக்கும் ஆதரவிற்கும் எனது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி என ஐக்கி பெர்ரி பதிவிட்டுள்ளார்
இதனையடுத்து ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த தாமரையா இது..! என பதிவிட்டு வருகிறார்கள்.