பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதிக்கு, கூடுதல் நேரம் வழங்கிட திட்டமிட்டுள்ளது. தற்போது, வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய மெசேஜை 1 மணி நேரம் 8 நிமிடங்களுக்கு பிறகு டெலிட் செய்திட முடியாது. ஆனால், புதிய அப்டேட்டில் 2 நாள் 12 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யும் வகையிலான வசதி வழங்கப்படுகிறது.
இதன் மூலம், பயனாளர்கள் தனிப்பட்ட சாட்டிலும், குரூப் சாட்டிலும் அனுப்பிய மெசேஜ்களை அழித்திட கூடுதல் நேரம் கிடைக்கிறது. கிடைத்த தகவலின்படி, இந்த அப்டேட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.410 இல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து சாதனங்களுக்கு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைம் லிமிட் மாற்றவது முதல் முறை அல்ல
வாட்ஸ்அப் மெசேஜ் டெலிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஏழு நிமிடங்களுக்குள் டெலிட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2018இல், டைம் லிமிட் 1 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் ஒரு வாரம் டைம் லிமிட் கொடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பரிசோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால், அந்த பிளேனை செயல்படுத்தாமல், 2 நாள் 12 மணி நேர திட்டத்தை வாட்ஸ்அப் கையில் எடுத்துள்ளது.
introductory screen அறிமுகம்
இதுதவிர, வாட்ஸ்அப் communities புதிதாக introductory screen அம்சத்தை பெறுகின்றன. இதில், குரூப் அட்மின்கள், தாங்கள் நிர்வகிக்கும் குழுக்களை ஒரே இடத்தில் விரைவாக அணுகிட உதவியாக இருக்கும். இதன் மூலம், பயனர்கள் அனைத்து குழுக்களுக்கும் மற்றும் பலவற்றிற்கும் அறிவிப்புகளை எளிதாக அனுப்பிட முடியும்.