இந்த 5 தானங்களை செய்தால் போதும். கண்ணீரோடு கஷ்டத்தில் கண் கலங்கி நிற்கும் குடும்பத்திற்கு, சீக்கிரமே ஒரு நல்லது நடக்கும்...

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

இந்த 5 தானங்களை செய்தால் போதும். கண்ணீரோடு கஷ்டத்தில் கண் கலங்கி நிற்கும் குடும்பத்திற்கு, சீக்கிரமே ஒரு நல்லது நடக்கும்.

நாம் செய்யக்கூடிய தானமும் தர்மமும் நம் தலையை காக்கும் என்ற கூற்று நம் முன்னோர்களால் சொல்லி வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளுக்கு உண்டான அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை‌. இருப்பினும் சுலபமாக அனைவருக்கும் புரியும்படி இதற்கான விளக்கத்தை முதலில் நாம் தெரிந்து கொள்வோம். தானம் என்பது, ஏதாவது பலனை எதிர்பார்த்து நாம் அடுத்தவர்களுக்கு செய்வது. தர்மம் என்பது எதையுமே எதிர்பார்க்காமல் இல்லாதவர்களுக்கு மனதார உதவி செய்வது. இப்படி எதையும் எதிர்பார்க்காமல் நாம் செய்யக்கூடிய தர்மத்தின் புண்ணியமானது நமக்கு மட்டுமல்ல நம்முடைய சந்ததியினரையும் சேரும்.

தர்மம் என்ற வார்த்தைக்கு நேர்வழியில் நடப்பது என்ற வேறு ஒரு பொருளும் உள்ளது. நமக்கு வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டம் வந்தாலும், தர்மம் தவறாமல் நியாயமாக நடந்து கொண்டால், கர்ம வினையால் நமக்கும், நம்முடைய சந்ததியினருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை தவிர்த்துக் கொள்ள, நாமும் நம் சந்ததியினரும் சந்தோஷமாக வாழ, நாம் எந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த 5 பொருட்களை இயலாதவர்களுக்கு தானமாக கொடுங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண பிரச்சனைக்கு மட்டும்தான் இந்த தானம் என்பது கிடையாது. பணம் தோடு சேர்த்து வீட்டில் இருக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற இந்த தானங்கள் சிறந்தது.

பச்சரிசி, வெல்லம், நல்லெண்ணெய், துவரம் பருப்பு, தேங்காய். தானம் கொடுக்கக்கூடிய அளவு என்பது உங்களுடைய வசதியைப் பொறுத்தது. எவ்வளவு ரூபாய்க்கு இந்த பொருட்களை உங்களால் வாங்கி, எத்தனை பேருக்குக் கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கும் கொடுக்கலாம். மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை கூட இந்த பொருட்களை இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள்.

நாங்களே வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கின்றோம். எங்களால் எப்படி இந்த தானத்தை கொடுக்க இயலும் என்ற எண்ணம் பணத்திற்காக கஷ்டப்படுபவர்களின் மனதிலும் எழும். இருக்கும் போது தானம் கொடுப்பதை விட, இல்லாதபோது கஷ்டப்பட்டு தானம் கொடுப்பதில் தான் அதிக பலன். பணத்திற்காக கஷ்டப்படுபவர்கள் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு, ஏதாவது ஒரு வகையில் பணத்தை சம்பாதித்து, மாதத்தில் ஒரு நாள் உங்களை விட கஷ்டப்படும் ஒரு ஏழைக்கு இந்த தானத்தை எப்படியாவது கொடுத்து விடுங்கள். நிச்சயமாக இதற்கு உண்டான பலன் கூடிய விரைவில் உங்களை வந்து சேரும். (நீங்கள் கொடுத்த அரிசியை பசியோடு இருப்பவர்கள் உலையில் போட்டு சாப்பிட்ட திருப்தி அடைந்தால் போதும் உங்கள் கர்மவினை தீரும்.)

பணம் மட்டும் எங்கள் வாழ்வில் பிரச்சனை இல்லை. பணம் தேவைக்கு அதிகமாக நிறையவே உள்ளது என்பவர்கள் உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இந்த பொருட்களை தானமாக வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய மாற்ற பிரச்சனைகள் எல்லாம் சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

அப்படி என்னதான் இந்த ஐந்து பொருட்களிலும் அடங்கியுள்ளது என்ற சந்தேகமும் நிச்சயம் எல்லோர் மனதிலும் எழும் அல்லவா. பச்சரிசி சந்திரனுக்கு உரிய பொருள். இந்த பொருளை தானமாகக் கொடுக்கும் போது நம் வீட்டில் இருப்பவர்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும். அறிவுத்திறன் மங்கி போகாது. எதை செய்தாலும் திறமையாக செய்து அதில் வெற்றி காண்பார்கள்.

வெல்லம் இனிப்பு சார்ந்த பொருள். இது சுக்கிரனுக்கு உகந்த பொருளாக சொல்லப்பட்டுள்ளது. மகாலட்சுமி வாசம் செய்ய கூடிய வெல்லத்தை தானம் கொடுத்தால் தன தானியம் வீட்டில் நிறைவாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

எண்ணெய் என்றாலே சனி பகவானுக்கு உரியது. சனிபகவானின் ஆசீர்வாதத்தை பெற்று விட்டால் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் எல்லாம் சரியாகிவிடும். துவரம்பருப்பு செவ்வாய் பகவானுக்கு உரியது. ஒட்டுமொத்த நிலம் வீட்டையும் குறிப்பது. வீடு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது உங்களுக்கு சரியாகிவிடும். தேங்காய், தென்னை மரம் போல உங்களுடைய வாழ்வு வளமாக உயர வேண்டும் என்பதற்காக தேங்காய் தானமாக கொடுக்கப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் சாஸ்திரப்படி இந்த ஐந்து தானத்தை செய்யலாம். சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அடுத்தவர்களுடைய பசியை ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த தானத்தை செய்து பலன் பெறலாம் என்று கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க