ஆன்மீக தீபம் சில தகவல்கள்

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

"ஆன்மீக தீபம் சில தகவல்கள்"


கலப்பு எண்ணெய் தீபம் வேண்டாம் அது தீமையை தரும்.


சமீப வருடங்களாக இறைவனுக்கு பூஜையின் போது ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் ஒன்பது கூட்டு எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே வீட்டிலோ, ஆலயத்திலோ தொழில் நிறுவனங்களிலோ அலுவலகங்களிலோ தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு....


பஞ்ச தீப எண்ணை; தீப நெய் எனவும் விற்பனை ஆகிறது.
இவைகளை கண்டிப்பாக பயன் படுத்த கூடாது.

இதனால் எந்த பலனும் கிடையாது.

எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது.


அதர்வன மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும்.

அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,


தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும்.

விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை இருள் விலகி,
அறிவு பெருகுகிறது.
வீடு புனிதமடைகிறது.
வளமும் ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது.
நமது வாழ்வின் பாவங்களை துடைக்கின்றது.
மனதின் தீய எண்ணங்களை எரிக்கின்றது.


விளக்கில் ஊற்றி ஏற்றப்படுவதற்காக பலரும் பல வித எண்ணெய்களை பயன்படுத்துவர். ஆன்மீகத்தில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு பொருள் மற்றும் பலன் உண்டு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் துயரங்களுக்கு ஏற்ப, விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி ஏற்றி அவர்கள் துயரங்களை களைந்து வீட்டிற்கு அமைதியை கொண்டு வரலாம்.

நல்லெண்ணெய்:-

தூய்மையான நல்லெண்ணெய் தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவகிரகங்களையும் திருப்திப்படுத்தலாம்.

நெய்:-

நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதோடு நவகிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும்,

இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர்,
5 வகை எண்ணெய் கொண்டு தனித்தனியே ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய்.
இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,!
இதுவே பஞ்சதீபம்.


ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது ) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்,


இல்லத்தில் பயன் படுத்த நல்ல பலன்களை பெற
நெய் அல்லது விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவையே சிறப்பு.


நல்லெண்ணெய்:-

தூய்மையான நல்லெண்ணெய் தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவக்கிரகங்களையும் இதன் மூலம் திருப்தி படுத்தலாம்.


விளக்கெண்ணெய்:-

விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு புகழ் வந்து சேரும்.


நெய்:-

நெய்யால் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதோடு நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.


24 மணிநேரமும் விளக்கு எரியலாம். முடியாதவர்கள் காலை 6ல் இருந்து 7க்குள் விளக்கு ஏற்றி மதியம் 12 க்குள் மலர் கொண்டு குளிர்விக்க பின் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி உறங்கும் முன் அல்லது இரவு 9 மணிக்கு மலர் கொண்டு குளிர்விக்கலாம்.

அவ் வீட்டிற்க்குறிய பெண் அல்லது ஆண் ஏற்றலாம்.

தீபத்தை பராமரிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் செவ்வாய் வெள்ளியாவது ஏற்றிட நன்மை பயக்கும்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க