இன்றைய ராசிபலன் - 24.03.2022 - வியாழக்கிழமை

ஆன்மீகம் / ராசிபலன்கள்

🚩*  ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️🚩
  🔯ராசி பலன்கள்🔯🚩*
         ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
           🕉️ ராசி பலன்கள்


🔔24-03-2022🔔

மேஷம்
மார்ச் 24, 2022


உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முடிவுகளை தவிர்க்கவும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. சிந்தித்து செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  8

அதிர்ஷ்ட நிறம் :  நீலநிறம்


அஸ்வினி :  அனுசரித்து செல்லவும்.

பரணி :  விவாதங்களை தவிர்க்கவும்.

கிருத்திகை :  பொறுமை வேண்டும்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 24, 2022


மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் :  இளம் மஞ்சள்


கிருத்திகை :  வரவு மேம்படும்.

ரோகிணி :  நெருக்கம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் :  வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 24, 2022


பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான நம்பிக்கை ஏற்படும். பிரபலமானவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை :  வடக்கு  

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் நிறம்


மிருகசீரிஷம் :  நிதானம் வேண்டும்.

திருவாதிரை :  முன்னேற்றம் ஏற்படும்.

புனர்பூசம் :  மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


கடகம்
மார்ச் 24, 2022


உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கடினமான செயல்களையும், எளிமையாக செய்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் :  இளநீலம்


புனர்பூசம் :  லாபம் கிடைக்கும்.

பூசம் :  புரிதல் உண்டாகும்.

ஆயில்யம் :  வெற்றிகரமான நாள்.
---------------------------------------

சிம்மம்
மார்ச் 24, 2022


தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் :  7

அதிர்ஷ்ட நிறம் :  பழுப்பு நிறம்


மகம் :  சேமிப்பு அதிகரிக்கும்.

பூரம் :  நன்மையான நாள்.

உத்திரம் :  உதவி கிடைக்கும்.
---------------------------------------


கன்னி
மார்ச் 24, 2022


உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிக்கல்கள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு


உத்திரம் :  வாய்ப்புகள் ஏற்படும்.

அஸ்தம் :  ஒத்துழைப்பான நாள்.

சித்திரை :  முடிவு கிடைக்கும்.
---------------------------------------


துலாம்
மார்ச் 24, 2022


நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  8

அதிர்ஷ்ட நிறம் :  ஆகாய நீலம்


சித்திரை :  மகிழ்ச்சியான நாள்.

சுவாதி :  ஆதரவு கிடைக்கும்.

விசாகம் :  நிதானம் வேண்டும்.
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 24, 2022


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை :  வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் :  5

அதிர்ஷ்ட நிறம் :  கருநீலம்


விசாகம் :  சிந்தனை மேம்படும்.

அனுஷம் :  சேமிப்பு அதிகரிக்கும்.

கேட்டை :  விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------


தனுசு
மார்ச் 24, 2022


கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  9

அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு நிறம்


மூலம் :  வாக்குவாதங்கள் நீங்கும்.

பூராடம் :  சிந்தித்து செயல்படவும்.

உத்திராடம் :  மந்தமான நாள்.
---------------------------------------


மகரம்
மார்ச் 24, 2022


எதிலும் வேகத்தை விட, விவேகத்துடன் செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வியாபாரம் ரீதியான வெளியூர் பயணங்கள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  3

அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு


உத்திராடம் :  விவேகம் வேண்டும்.

திருவோணம் :  சாதகமான நாள்.

அவிட்டம் :  பயணங்கள் கைகூடும்.
---------------------------------------


கும்பம்
மார்ச் 24, 2022


குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான செயல் திட்டங்களை வடிவமைப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  6

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்


அவிட்டம் :  புரிதல் உண்டாகும்.

சதயம் :  மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி :  இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------


மீனம்
மார்ச் 24, 2022


உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும். நிர்வாகத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். மருத்துவத்துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  4

அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல் நிறம்


பூரட்டாதி :  அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி :  வாய்ப்புகள் கிடைக்கும்.

ரேவதி :  மதிப்பு மேம்படும்.
---------------------------------------


🕉 ஸ்ரீ குரு ஜோதிட ஐயர் 🕉

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க