இதையெல்லாமா கணக்கு எடுக்குறீங்க... இத்தனை நடிகைகளின் உதடுகளில் கை வைத்த விஜய்…

தகவல்கள் / சினிமா

நெட்டிசன்கள் தற்போது ஒரு வித்தியாசமான கணக்கெடுத்து வைரலாக்கி இருக்கிறார்கள். அது என்ன என்றால், நடிகர் விஜய் நடித்த படங்களில் இத்தனை நடிகைகளின் உதடுகளில் கை வைத்துள்ளார்கள் என்று கணக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இதை படிக்கும்போது, அடேய் இதையெல்லாமா கணக்கெடுக்குறீங்க, உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

இதற்கு முன்பு கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளைக் கணக்கிட்டு பேசப்பட்டது. அதற்கு பிறகு, விஜயகாந்த் தனது படங்களில் இடம்பெற்ற நடிகைகளின் இடுப்பைக் கிள்ளும் காட்சிகள் எத்தனை நடிகைகள் என்று பேசப்பட்டது. அந்த வரிசையில் நடிகர், விஜய் தனது படங்களில் எத்தனை நடிகைகளின் உதடுகளில் கைவைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் ஒரு புது கணக்கு எடுத்து சமூக ஊடகங்களில் உலவ விட்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் படங்களில் அவர் நடிகைகளின் உதடுகளில் கைவைத்து கிள்ளும் காட்சி இடம்பெறுவதை நெட்டிசன்கள் கணக்கெடுத்துள்ளனர். அதன்படி, விஜய் தான் நடித்த படங்களில் நடிகைகள் அசின், அனுஷ்கா, ஹன்சிகா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே என 6 நடிகைகளின் கைவைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

அதன்படி, பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிபெற்ற போக்கிரி படத்தில் மாம்பழம் பாட்டில் விஜய் நடிகை அசினின் உதட்டை கிள்ளி எடுப்பார்.

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரொமான்ஸ் செய்யும்போது நடிகர் விஜய் நடிகை அனுஷ்காவின் உதட்டை கிள்ளுவார்.

அதே போல, புலி படத்தில், ஒரு பாடல் காட்சியில் ஹன்சிகாவின் உதட்டிலும் கை வைத்து கிள்ளியிருப்பார் நடிகர் விஜய்.

சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்தபோது, விஜய் ஒரு பாடல் காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷின் உதட்டை கிள்ளி எடுப்பார்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்த மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற மாச்சோ பாடலில் நடிகை காஜல் அகர்வாலின் உதட்டிலும் நடிகர் விஜய் கை வைத்து விளையாடி இருப்பார்.

அந்த வரிசையில் தற்போது, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து ரிலீஸுக்காக காத்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலிலும் விஜய் நடிகை பூஜா ஹெக்டேவின் உதட்டை கிள்ளியுள்ளார்.

கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் முத்தக் காட்சிகளைப் போல, விஜய் படங்களில் விஜய் நடிகைகளின் உதட்டைக் கிள்ளும் காட்சிகள் இடம்பெறுகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்துவருகின்றனர்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க